2.5 கோடி பேர்.. ஒரே ஒரு போட்டோ.. டோட்டல் கும்பமேளாவும் சூப்பர்.. அசத்திய இஸ்ரோ!
உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடக்கும் கும்பமேளா விழாவில் விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை கும்பமேளா தொடங்கியது. உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது.
பிரயாகராஜின் கங்கை நதிக்கரையில் இந்த விழா தொடங்கியது. மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

வைரல் புகைப்படங்கள்
இந்த கும்பமேளா தொடர்பாக நிறைய புகைப்படங்கள் வெளியானது. சில புகைப்படங்கள் மிகவும் வைரலானதும் குறிப்பிடத்தக்கது. முக்கியமாக கும்பமேளாவில் இருக்கும் வெளிநாட்டு அகோரிகளின் புகைப்படங்கள் அதிக வைரலானது. தற்போது ஆகாயத்தில் இருந்து எடுக்கப்பட்டு புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

ஸ்பேஸ்
சங்கம் என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வின் புகைப்படம் ஆகாயத்தில் இருந்து எடுக்கப்பட்டு இருக்கிறது. இஸ்ரோ இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இஸ்ரோவின் கார்டோ சாட் -2 (CartoSat-2) இந்த புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறது. கருப்பு வெள்ளையில் இந்த புகைப்படம் இருக்கிறது.

எங்கு எடுக்கப்பட்டது
கங்கை மற்றும் யமுனா நதியும் இணையும் இடம் ஆகும் இது. இங்குதான் கடந்த செவ்வாய்க்கிழமை பெரிய பூஜைகள் நடந்து கும்பமேளா தொடங்கியது. இந்த பூஜையின் புகைப்படம்தான் தற்போது வைரலாகி உள்ளது. 32 சதுர கிலோமீட்டருக்கு அதிகமான பரப்பு இந்த புகைப்படத்தில் படம் பிடிக்கப்பட்டு இருக்கிறது.

எவ்வளவு பேர்
மொத்தம் இந்த புகைப்படத்தில் மட்டும் 2.5 கோடிக்கும் அதிகமான மக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. முக்கியமாக இதில் 95 சதவிகிதம் பேர் அகோரிகள் என்றும் கூறப்படுகிறது. இந்த புகைப்படம் பெரிய பிரமிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு இருக்கிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications