Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பூமிக்கு அடியில் அற்புதமான வீடு.. இந்தியாவை அசரடித்த சிற்பி.. பாராட்டி தள்ளிய ஆனந்த் மஹிந்திரா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பூமிக்கு அடியில் 11 அறைகளுடன் மாளிகை கட்டி, 12 வருடங்களாக விவசாயி ஒருவர் வாழ்ந்து வருவது குறித்து கேள்விப்பட்ட தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்த்ரா, அவரை வெகுவாக பாராட்டினார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹர்தோய் என்ற பகுதியில் பூமிக்கு அடியில் இரண்டு மாடி வீடு ஒன்று கட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. 12 ஆண்டுகளாக கட்டப்பட்ட இந்த அற்புதமான மாளிகையில் 11 அறைகள், ஒரு மசூதி, படிக்கட்டுகள், ஒரு கேலரி மற்றும் ஒரு ஓவிய அறை ஆகியவை இருக்கின்றன. பப்பு பாபா என்று அழைக்கப்படும் இர்ஃபான் என்பவர் தான் இந்த மாளிகையை கட்டி உள்ளார்.

it is a thing of beauty: Anand Mahindra praise UP man who build underground home | see video

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த இர்பான் விவசாயி ஆவார். இவர் கடந்த 2010-ம் ஆண்டு வரை குடும்பத்துடன் வாழ்ந்து வந்த நிலையில், அப்பாவின் மரணத்திற்கு பிறகு வாழ்க்கையில் வேறு பாதையில் பயணிக்க விரும்பினார். முதலில் தேர்தலில் போட்டியிட்டார் ஆனால் தோல்வி அடைந்தார். இதையடுத்து வாழ்வில் எதாவது புதுமையாக இந்த உலகில் செய்து காட்ட வேண்டும் என்று நினைத்தார்.

அதற்காக சினிமா பாணியில் பூமிக்கு அடியில் பாதாள வீட்டை கட்ட முடிவு செய்துள்ளார். அதன்படி தரிசாக கிடந்த நிலத்தில் பூமிக்கு அடியில் தனிநபராக கடந்த 12 ஆண்டுகளாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்ட இவர் ஒரு மசூதி, 11 அறைகள், படிக்கட்டுகள் மற்றும் கேலரி, ஒரு சித்திர அறையுடன் கூடிய பிரமாண்ட மாளிகையை கட்டி உள்ளார்.

பண்டைய காலத்தில் இருந்தது போன்று மாளிகையை உருவாக்கியவர், கடந்த 12 வருடங்கள் அதற்காகவே வாழ்வையே அர்ப்பணித்துள்ளார். தற்போது அந்த மாளிகையில் தான் வசித்தும் வருகிறார்கள். இர்பானின் இந்த கட்டிடக்கலை பலரையும் வியக்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் இர்பானை பாராட்டி வருகிறார்கள்.

மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திராவையே யாரு சாமி நீ.. எனக்கே பார்க்கனும் போல இருக்கு.. பூமிக்கு அடியில் 11 அறைகளுடன் மாளிகை கட்டியிருக்கேப்பா என்று பாராட்ட வைத்துள்ளார் இர்பான்.

ஆனந்த் மஹிந்திரா வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "ஹர்டோயில் உள்ள ஒருவர் 12 வருடத்தில் பூமிக்கு அடியில் இப்படி ஒரு வீட்டை கட்டி உள்ளார். வெறும் கட்டிடம் என்று கடந்துவிட முடியாது. இது மிக அழகான விஷயம். இந்த வீட்டை கட்டிய அந்த மனிதர் ஒரு சிற்பி... அவரைப் போன்ற இன்னும் பல புதுமையான மற்றும் ஆர்வமுள்ள கட்டிடக் கலைஞர்கள் எங்களுக்குத் தேவை," என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+