"நீ இல்லாம தூங்க முடியலை.. கிளம்பி வா".. கெஞ்சிய கணவர்.. மறுத்த மனிஷா.. அடுத்து நடந்த ஷாக்!
7 பேரை தீயால் கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டார்
லக்னோ: "நீ இல்லாமல் என்னால தனியா தூங்க முடியல.. கிளம்பி வா" என்று மாமியார் வீட்டில் இருந்த தன் மனைவியை அழைத்தார் கணவர்.. இதுதான் விபரீதமாக போய் முடிந்துவிட்டது.
உத்தரபிரதேசத்தில் பெண்களுக்கு எந்த வகையிலுமே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறது.. பெண் குழந்தைகள் பலாத்காரம் முதல், வன்முறை வரை கட்டுக்கடங்காமல் உள்ளது.

எதிர்க்கட்சிகள் இவைகளை பிரதானமாக எடுத்து விமர்சனம் செய்தாலும், யோகி அரசின் போக்கு இதே நிலைமையில்தான் உள்ளது.. அந்த வகையில் இப்போதும் ஒரு கொடுமை வேறு விதமாக நடந்துள்ளது.
கான்பூரின் ரட்டுபுர்வா பகுதியில் முகேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார்... இவர் ஒரு டிரைவர்.. இட்டாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர்.. அதே ஊரை சேர்ந்தவர்தான் இவர் மனிஷா.. இவர்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆகிறது.
ஆனால், குடும்பம் நடத்த போதுமான வருமானம் இல்லை.. இதனால் கல்யாணம் ஆனது முதலே வீட்டில் பண பிரச்சனை இருந்துள்ளது.. அது பல பிரச்சனைகளை கொண்டு வந்துவிட்டுள்ளது.. இந்த சமயத்தில்தான் மனிஷா கர்ப்பமானார்.. எனவே, பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு சென்றுவிட்டார்.
சென்ற மாதம் மனிஷாவுக்கு குழந்தையும் பிறந்தது.. ஒரு மாதம் ஆகிவிட்ட நிலையில், மனைவியை அழைத்து கொண்டு வர முகேஷ் மாமியார் வீட்டுக்கு சென்றார்.. ஆனால், மாமியாரும், மாமனாரும், வறுமையை காரணம் காட்டி தங்கள் மகளை, அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டனர்.
இதன்பிறகு முகேஷ், மனிஷாவிடம் சென்று, நீ இல்லாமல் என்னால் தூங்க முடியவில்லை.. என்கூட இப்பவே கிளம்பி வா" என்று குடும்பம் நடத்த அழைத்தார்.. அப்போதும் மனிஷா வரமுடியாது என்று சொல்லிவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த முகேஷ்,தன் மாமியாரின் வீட்டை பெட்ரோல் ஊற்றியே நெருப்பு வைத்து எரித்துவிட்டார்.
இந்த தீயில், மனிஷா, அவரது அப்பா ஹீராலால், அம்மா ஷிவகுமாரி, அண்ணன் மனிஷ், தங்கைகள் உமா, ராதா மற்றும் வந்தனா உள்ளிட்ட 7 பேரும் தீயில் சிக்கி கொண்டனர்.. உடம்பெல்லாம் நெருப்பு பற்றிய நிலையில், அவர்கள் அலற, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இதில் பலரது நிலைமை சீரியஸாக இருக்கிறதாம்.. முகேஷ் இப்போது போலீசின் பிடியில் உள்ளார்!
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications