மகா கும்பமேளா போர்க்களமாக மாறும்.. இந்து சித்தாந்தத்தை அழிப்போம்.! காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
லக்னோ: பிரயாக்ராஜில் இன்னும் சில நாட்களில் மகா கும்பமேளா தொடங்கும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதற்கிடையே மகா கும்பமேளாவுக்கு மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், இந்துத்துவா சித்தாந்தத்தை அழிக்க வேண்டும் என்றும் பிரயாக்ராஜ் நகரம் போர்க்களமாக மாறும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளது.
இந்து மத நிகழ்வுகளில் முக்கியமானது மகா கும்பமேளா.. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த மகா கும்பமேளா, உத்தரப் பிரதேசத்தில் பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும்.

மகா கும்பமேளா:
கங்கை, யமுனை மற்றும் இந்துக்கள் நம்பும் சரஸ்வதி நதிகள் ஒரே இடத்தில் சங்கமிக்கும் இடத்தில் நடக்கும் இந்த மகா கும்பமேளாவில் பல கோடி பக்தர்கள் ஒன்றுகூடி புனித நீராடுவார்கள். இந்தாண்டு ஜன. 13 முதல் பிப. 26ம் தேதி வரை மகா கும்பமேளா நடைபெறுகிறது. அதில் ஷாஹி ஸ்னான் எனப்படும் முக்கிய புனித நீராடுதல் நிகழ்வு இரண்டாம் நாளான ஜன. 14ம் தேதி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசும் உத்தரப் பிரதேச அரசும் செய்துள்ளது. பக்தர்கள் எந்தவொரு சிரமத்தையும் எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காக மின்சாரம், கழிப்பறை, குளியலறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. பல கோடி பக்தர்கள் திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
காலிஸ்தான் இயக்கம் மிரட்டல்:
இதற்கிடையே பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவை சீர்குலைக்கப் போவதாகத் தடை செய்யப்பட்ட சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவரான காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன் மிரட்டல் விடுத்து இருக்கிறார். இது தொடர்பாக "பிரயாக்ராஜ் சலோ" என்ற மிரட்டல் வீடியோவை விடுத்துள்ள அவர், இந்துத்துவா சித்தாந்தத்தை எதிர்க்கவும் அழிக்கவும் வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும், லக்னோ மற்றும் பிரயாக்ராஜ் நகரில் உள்ள விமான நிலையங்களில் காலிஸ்தான் மற்றும் காஷ்மீரி கொடிகளை ஏந்திச் செல்லுமாறும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு வலியுறுத்தினார். இந்தாண்டு மகா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜ் நகரம் போர்க்களமாக மாறும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.
2வது எச்சரிக்கை:
மகா கும்பமேளாவுக்கு எதிராகக் கடந்த 10 நாட்களில் குர்பத்வந்த் சிங் விடுக்கும் இரண்டாவது எச்சரிக்கை இதுவாகும். இதற்கு முன்பு வெளியிட்ட எச்சரிக்கை வீடியோவில், மகர சங்கராந்தி (ஜனவரி 14), மௌனி அமாவாசை (ஜனவரி 29), மற்றும் பசந்த பஞ்சமி (பிப்ரவரி 3) ஆகிய நாட்களில் நடைபெறும் நீராடலைச் சீர்குலைக்கப் போவதாக அவர் மிரட்டல் விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்து மத அமைப்பு கண்டனம்:
குர்பத்வந்த் சிங்கின் மிரட்டலுக்கு இந்து மத சாமியார்களின் உச்சபட்ச அமைப்பான அகில பாரதிய அகடா பரிஷத் கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. குர்பத்வந்த் சிங்கின் மிரட்டலை நிராகரித்த பரிஷத்தின் தலைவர் மஹந்த் ரவீந்திர புரி, அவரை பைத்தியக்காரன் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "குர்பத்வந்த் சிங் என்ற அந்த நபர் மகா கும்பமேளாவில் நுழைய முயன்றால் அவர் அடித்து விரட்டப்படுவார். இதுபோன்ற பல நூறு பைத்தியக்காரர்களை நாங்கள் பார்த்திருக்கிறோம்
இது சீக்கியர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து நடந்தும் மகா கும்பமேளா. இங்கே பிரிவினையைத் தூண்டும் பன்னூனின் முயற்சிகள் தேவையற்றது. சீக்கிய சமூகம் தான் நமது சனாதன பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அவர்கள் சனாதன தர்மத்தைப் பாதுகாத்துள்ளனர்" என்று அவர் மேலும் கூறினார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications