அட.. அட.. கேபினெட் மீட்டிங்கை கும்பமேளாவில் நடத்திய யோகி.. உ.பி வரலாற்றில் முதல்முறை!
உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முதல்முறை தனது கேபினெட் மீட்டிங்களை கும்பமேளாவில் நடத்தி இருக்கிறது.
Recommended Video

லக்னோ: உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முதல்முறை தனது கேபினெட் மீட்டிங்களை கும்பமேளாவில் நடத்தி இருக்கிறது.
உத்தர பிரதேசத்தில் கும்பமேளா விழா நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி இந்த விழா தொடங்கியது. இதை பார்க்க ஆயிரக்கணக்கில் அங்கு மக்கள் கூடி வருகிறார்கள்.
மார்ச் 4ம் தேதி வரை 55 நாட்கள் இந்த விழா நடக்கிறது. மொத்தம் 13 கோடி இந்து சாமியார்கள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

முக்கியத்துவம்
இந்த கும்பமேளாவிற்கு பாஜக மிக அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த விழா மூலம் மக்கள் மனதில் நல்ல இடமும் பிடிக்கலாம் என்று பாஜக நினைக்கிறது. முக்கியமாக தேர்தல் முடிவுகளில் இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று பாஜக நினைக்கிறது.

எவ்வளவு செலவு
ஏற்கனவே கும்பமேளாவிற்கு 4200 கோடி ரூபாயை உத்தர பிரதேச அரசு ஒதுக்கி உள்ளது. யோகி ஆதித்யநாத் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த கும்பமேளா இருக்க வேண்டும் என்று ஏற்கனவே அரசு அதிகாரிகளிடம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. உத்தர பிரதேசத்தில் யாரும் இதுவரை கும்பமேளாவிற்கு இவ்வளவு செலவு செய்யவில்லை.
|
மீட்டிங் நடத்தினர்
இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவை முதல்முறை தனது கேபினெட் மீட்டிங்களை கும்பமேளாவில் நடத்தி இருக்கிறது.அமைச்சரவையில் இருக்கும் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இவர்கள் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து கங்கை நதியில் முங்கி பின் ஆலோசனை நடத்தினார்கள்.

சில நிமிடம்
இந்த மீட்டிங்கள் அமைச்சர்கள் லோக் சபா தேர்தல் குறித்தும், கும்பமேளாவில் இறுதிநாள் குறித்தும், ராமர் கோவில் குறித்தும் பேசிதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தில் கேபினெட் மீட்டிங் அரசு அலுவலகம் இல்லாத ஒரு இடத்தில் நடந்தது இதுவே முதல்முறையாகும். இதனால் இந்த மீட்டிங் பெரிய வைரலாகி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications