அமைச்சரை நீக்குங்கள்...மகனை கைது செய்யுங்கள்...விவசாய அமைப்புகள் குடியரசுத்தலைவருக்கு கடிதம்
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது.
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது. லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்து மற்றும் வன்முறை காரணமாக மத்திய அமைச்சரின் மகன் உடன்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ரா விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தின் லக்கிம்பூர் விவசாயிகள் போராட்டத்தின் மீது காரைக்கொண்டு மோத செய்ததில் 2 விவசாயிகள் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமாக சொல்லப்படும் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் உட்பட 13 பேர் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் லக்கீம்பூா் மாவட்டத்தில் உள்ள பன்வீா்பூா் கிராமத்துக்கு துணை முதல்வா் கேசவ் பிரசாத் மெளா்யா வருகைக்கு எதிா்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த பொழுது இந்த விபத்து மற்றும் வன்முறை சம்பவம் ஏற்பட்டது.
இதனை முற்றிலுமாக மறுத்துள்ள அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது மகன் ஆஷிஷ் மிஸ்ரா வன்முறையுடன் தொடர்புடையவர் இல்லை என்றும்,என் மகன் அந்த இடத்தில் இல்லை.அங்கு தொழிலாளர்கள் மீது குச்சிகள் மற்றும் வாள்களால் தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் இருந்தனர். என் மகன் இருந்திருந்தால், அவர் உயிருடன் வெளியே வந்திருக்க மாட்டார் என்று கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து,லக்னோவில் இருந்து லக்கிம்பூர் செல்ல வீட்டுக்கு வெளியே வந்த அகிலேஷை போலீசார் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து வீட்டு வாசலில் தர்ணா போராட்டம் நடத்திய அகிலேஷ் யாதவ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இன்று அதிகாலை லக்னோவிலிருந்து லக்கிம்பூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியாங்கா காந்தி கைது செய்யப்பட்டார். பிரியங்கா காந்தி கைதுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.மேலும்,இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பிரியங்கா நீங்கள் பின்வாங்க மாட்டீர்கள் என்று எனக்கு தெரியும்,உங்கள் தைரியத்தைக் கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள். நீதிக்கான இந்த அகிம்சை போரில்,நாட்டின் விவசாயிகளை வெற்றி பெறச் செய்வோம்",என்று பதிவிட்டுள்ளார்.
விவசாய அமைப்புகள் கடிதம்
விவசாயிகள் மரணம் உத்தரபிரதேசத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் வன்முறை தொடர்பாக குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்துக்கு சம்யுக்தா கிசான் மோர்ச்சா கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடித்ததில் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்,மத்திய உள்துறை இணை அமைச்சராக இருக்ககூடிய அஜய் மிஸ்ரா மகன்தான் இந்த பிரச்சனைகளுக்கு காரணம்,எனவே,அமைச்சர் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து உச்சநீதிமன்ற மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து,மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவியில் இருந்து அஜய் மிஸ்ரா விலக வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபில் வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications