Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமித்ஷாவே ஜெர்க் ஆயிட்டாரே.. ஆட்டத்தை களமாடிய அகிலேஷ் யாதவ்.. உச்சிவரை சென்றும்.. சறுக்கியது எங்கே?

அகிலேஷ் யாதவ் தோல்விக்கு என்ன காரணங்களாக அமைந்துள்ளன

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாஜக மீதான அதிருப்திகள் காரணமாக இந்த முறை எப்படியும் அகிலேஷ் யாதவ் வெற்றி பெற்றுவிடுவார் என்ற அதீத நம்பிக்கைகள் பெருகிய நிலையில், சமாஜ்வாதி மண்ணை கவ்வி உள்ளது.. அகிலேஷூக்கு என்ன ஆச்சு? ஏன் சறுக்கினார்? எங்கே சறுக்கினார்? என்ற கேள்விகள் விவாதமாக எழுந்துள்ளன..!

கடந்த எம்பி தேர்தலில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதற்கு, உபியில் கிடைத்த அதிகமான தொகுதிகளே அடித்தளமிட்டன.. 2017-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் நான்கில் 3 பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்திருந்தது பாஜக...

இப்போதும் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால், உபியை தன்னுடைய கோட்டையாக கையில் இறுக்கிப்பிடித்து வைத்து கொள்ள வேண்டும் என்பதை பாஜக மேலிடம் நன்றாகவே உணர்ந்திருந்தது.

முகாம்கள்

முகாம்கள்

அதனால்தான், இந்த முறையும் பாஜக தலைவர்கள் உபியிலேயே தொடர்ந்து முகாமிட்டு வந்தனர்.. வழக்கமான தேர்தலை போலவே இந்த முறையும் சந்தித்துவிடலாம் என்று பாஜக கணக்கு போட்டிருந்தாலும், சமாஜ்வாதி அகிலேஷின் ஆதரவு என்பது பன்மடங்காக பெருகிவிட்டதை பார்த்து, பாஜக சற்று மிரண்டுதான் போனது.. ஆரம்பத்தில் அகிலேஷின் அரசியலை பாஜக பெரிதுபடுத்தவில்லை.. ஆனால், தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகளின் முடிவுகளை பார்த்துதான் அரண்டுவிட்டது.

 கணிப்புகள்

கணிப்புகள்

கணிப்புகள் அதனால்தான், உத்தர பிரதேச பொறுப்பையும் அமித்ஷா நேரடியாகவே ஏற்றுக் கொண்டார்.. வீதி வீதியாக தெரு தெருவாக உள்துறை அமைச்சரே பிரச்சாரத்தில் இறங்கினார்.. இப்போது தேர்தல் ரிசல்ட் தலைகீழாக வந்துள்ளது.. பாஜக வெற்றி பெற்று, அகிலேஷ் மண்ணை கவ்வ என்ன காரணங்கள் என்ற அலசல்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

 கருத்து கணிப்பு

கருத்து கணிப்பு

இந்த தேர்தலில் பாஜகவே எதிர்பாராத விதமாக பிற்படுத்தப்பட்ட தலைவர்களை தன் வசம் இழுத்த அகிலேஷ் யாதவ், பாஜகவிற்கு கடுமையான போட்டியை கொடுத்தார் என்பதை மறுக்க முடியாது.. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்களில் சமாஜ்வாடி கட்சி 150 இடங்களுக்கு குறையாமல் பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த எண்ணிக்கையை பெற முடியாமல் அகிலேஷ் யாதவ் 2 முறையாக தோல்வி அடைந்துள்ளார்.

பிரச்சாரங்கள்

பிரச்சாரங்கள்

ஏற்கனவே 2 முறை பாஜகவுக்கு எதிராக 2 முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் தோல்வியை தழுவினார்.. எனினும் இப்போது 3வது முறையாக ரிஸ்க் எடுத்தார். கூட்டணி அமைப்பதில் அகிலேஷ் புதிய வியூகம் வகுத்தார்... ஓம் பிரகாஷ் ராஜ்பர் தலைமையிலான சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ராஷ்ட்ரீய லோக்தளம், ஷிவ்பால் யாதவின் பிரகதிஷீல் சமாஜ்வாதி, அப்னா தளம் (கமேராவாதி) மற்றும் மஹான் தளம் கட்சி ஆகிய 5 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தார்.

நம்பிக்கை

நம்பிக்கை

காரணம், இந்த கட்சிகள் ஜாட் சமுதாயத்தினர் மற்றும் பரவலாக வட்டார அளவில் செல்வாக்கு கொண்டவை என்பதால்தான் தங்கள் கூட்டணிக்கு ஆதரவை பெற்றுத் தரும் என்று நம்பினார்.. இதுவும் தோல்வியில் முடிந்துள்ளது... அப்படியானால் எங்கே சறுக்கினார் அகிலேஷ்? அவர் கூட்டிய பிரச்சார கூட்டங்களுக்கு மக்கள் திரண்டு வரவே செய்தனர்.. ஒவ்வொரு பிரச்சாரத்திலும் அவர்கள் தந்த ஆதரவுகள் அபரிமிதமானவை,.

 யாதவ், முஸ்லிம்கள்

யாதவ், முஸ்லிம்கள்

அதேசமயம், சாதி ஓட்டுக்களை மட்டுமே அகிலேஷ் குறி வைத்து காய் நகர்த்தியதும் தோல்வியை பெற்று தந்திருக்கலாம் என்கிறார்கள்.. யாதவ் மற்றும் முஸ்லீம்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார் என்றால், நாளை உத்தரப்பிரதேச அரசியலில் யாதவர்களுக்கு எதிரான கட்சிகளிலிருந்து ஆதரவை அகிலேஷ் பெற தவறிவிடுவார் என்பதையும் அகிலேஷ் புரிந்து கொள்ள வேண்டும்.. அதனால், அகிலேஷ் தனது வாக்கு வங்கியை அனைத்து சாதியினரிடமும் கொண்டு செல்ல வேண்டும், அதற்கு தன்னுடைய பிரச்சாரத்தை சாதி, மதம் கடந்து பரவலாக அதிகரிக்க வேண்டும் என்பதையும் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

யாதவர்கள்

யாதவர்கள்

அதேசமயம் யாதவ் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் முற்றிலுமாக அகிலேஷை கைவிடவில்லை.. அவர்களின் வாக்குகளையும் பெற்றுள்ளார்.. யாதவர்கள் ஆதிக்கம் செலுத்தும் கர்ஹால் பகுதியில் இருந்து அகிலேஷ் வெற்றி பெற்றார்.. அகிலேஷின் மாமா ஷிவ்பால் யாதவும் ஜஸ்வந்த்நகர் தொகுதியில் இருந்து ஜஸ்வந்த்நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.. இது யாதவர் வாக்குகள் இவர்களுக்கு ஆதரவாக ஒன்று சேர்ந்துள்ளது என்பதையே எடுத்து காட்டுகிறது என்றாலும், குடும்ப அரசியல் என்ற பாஜகவின் விமர்சனத்தில் இருந்து சமாஜ்வாதி தப்பவில்லை.

ஆதரவாளர்கள்

ஆதரவாளர்கள்

இத்தனைக்கும் தேர்தலுக்கு முன்பு சுவாமி பிரசாத் மவுரியா, தாரா சிங் சவுகான் போன்ற மூத்த தலைவர்கள் பாஜகவில் இருந்து சமாஜ்வாதிக்கு தாவினர்.. இந்த தலைவர்கள் ஒரு பெரிய ஆதரவாளர்களை தங்களுடன் கொண்டு வருவார்கள், அவர்களால் நிச்சயம் வெற்றி கிடைக்கம் என்று அகிலேஷ் நம்பினார்... ஆனால் இந்த தலைவர்களோ, அவர்களது சொந்த ஆதரவாளர்களின் வாக்குகளை கூட முழுமையாக பெற முடியவில்லை.. ஓம்பிரகாஷ் ராஜ்பர் மட்டுமே இதில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளார்.. எனினும், இத்தனை சீனியர்கள், அதுவும் தெரிந்த முகங்கள் அகிலேஷூடன் இருந்தும் பாஜகவை வீழ்த்த முடியவில்லை.

வாக்குகள்

வாக்குகள்

தங்களது ஆதரவு வாக்குகளை அகிலேஷுக்கு ஆதரவாக மாற்ற முடியாமலும் போய்விட்டது.,. இதில் ஓம் பிரகாஷ் ராஜ்பார் சற்று பரவாயில்லை. ஓரளவுக்கு வாக்குகளை திருப்பியுள்ளார். ஆனால் மற்ற 2 தலைவர்களும் மிகப் பெரியவர்களாக கருதப்பட்ட போதிலும் வாக்குகள் அந்த அளவுக்கு வந்து சேரவில்லை. முகத்தை பார்த்து யாரையும் நம்பக் கூடாது என்பதற்கு அகிலேஷுக்கு இது ஒரு நல்ல பாடமாகும். எதிர்காலத்தில் அவர் மிகக் கவனமாக இருக்க வேண்டும் என்று இந்த விஷயத்திலும் எச்சரிக்க வேண்டி உள்ளது.

 தனிநபர் தாக்குதல்

தனிநபர் தாக்குதல்

மேலும் இந்த தேர்தல் பிரசாரத்தின்போது யோகி ஆதித்யநாத்தை தனிப்பட்ட முறையிலும் விமர்சித்தார் அகிலேஷ் யாதவ். புல்டோசர் பாபா என்று ஓபனாகவே விமர்சித்தார். மேலும் பல தனிநபர் தாக்குதல்களையும் தடித்த வார்த்தைகளையும் பிரச்சாரங்களில் தொடர்ந்து பயன்படுத்தியிருந்தார்... இதெல்லாம் கூட அவருக்கு எதிராக திரும்பி விட்டது என்கிறார்கள்.. அதாவது யோகிக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் கிடைக்க இது வகை செய்து விட்டதாம்..

 கிரிமினல்கள்

கிரிமினல்கள்

கிரிமினல்களுக்கு எதிராக செயல்பட்ட யோகிக்கு எதிராக அகிலேஷ் செயல்படுவதாக மக்கள் நினைக்க ஆரம்பித்து விட்டனர். தனிப்பட்ட முறையில் எந்தத் தலைவரை விமர்சித்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் அகிலேஷ் அதில் தவறு செய்து விட்டார்... இது கடந்த கால வரலாறுகளில் தெரிய வரும்... எல்லாவற்றிற்கும் மேலாக, தன் வெற்றி மீதான அதீத நம்பிக்கைதான் அலட்சியமாக மாறிவிட்டதாகவும், அதனால் அவர் தீவிரமாக வேலை செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.. எனவே அகிலேஷின் முழக்கங்கள் அடிப்படையில்லாத வெற்றுக் கூச்சலாக பார்க்கப்பட்டு விட்டது.. இதெல்லாம்தான் இந்த தேர்தல் தோல்வியில் அகிலேஷ் கற்க வேண்டிய பாடங்களாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+