Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி.யில் பாஜகவுக்கு உக்கிரமான எதிர்ப்பு அலை? பாஜக தலைவர்கள் அலறுவது அச்சத்தால்? ஷாக் ரிப்போர்ட்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு மிக கடுமையான எதிர்ப்பு அலை இருந்து வருவதாகவும் மத்தியிலும் மாநிலத்திலும் ஆளும் பாஜக அரசு மீது அச்சத்தையும் அதிருப்தியையும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பொதுமக்கள் வெளிப்படுத்துவதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.

The wire ஊடக நிறுவனத்தின் செய்தியாளர்கள், லோக்சபா தேர்தல் கருத்து கணிப்புக்காக உ.பி.யின் லக்னோ முதல் வாரணாசி வரை பல்வேறு தொகுதிகளில் பயணித்து மக்கள் மனநிலை என்ன என்பதை செய்திகளாக வெளியிட்டுள்ளனர். The wire ஊடக செய்தியாளர்கள், சமூகத்தின் பல்வேறு பிரிவினரை சந்தித்து அவர்களது கருத்துகளை அந்த செய்தியில் பதிவு செய்துள்ளனர்.

Lok Sabha Election 2024 BJP to get Shocking Result in UP

பாஜகவுக்கு கடும் எதிர்ப்பு: The wire ஊடக செய்தியில் இடம் பெற்ற தகவல்களின் தொகுப்பு: உத்தரப்பிரதேசத்தில் 2014, 2019 தேர்தல்களைப் போல பாஜக அதிகமான இடங்களைக் கைப்பற்றுமா? 65 இடங்களையாவது கைப்பற்றுமா? என்கிற கேள்வியைத்தான் உணர முடிகிறது. ஜாதி, மத அடிப்படையில் பாஜகவுக்கு எதிரான மனநிலை இருக்கிறது. கடந்த முறை பாஜகவுக்கு வாக்களித்தவர்கள் கூட இம்முறை ஊழல், வேலைவாய்ப்பின்மை, பணவீக்க விகிதம் இவற்றை சுட்டிக்காட்டி பாஜகவை நிராகரிப்பதாக சொல்கின்றனர்.

பகுஜன் சமாஜ் ஆதரவு: உத்தரப்பிரதேசத்தில் மக்களிடம் ஒருவித அச்ச உணர்வை இம்முறை பார்க்க முடிகிறது. பாஜகவுக்கு எதிராகப் பேசினால் போலீஸ் வருமோ என்கிற அச்சம்தான் அது. ஜாதிய அடிப்படையில் பார்த்தால் தலித்துகள் தங்களை பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்கு வங்கியாக மட்டுமே வெளிப்படுத்துகின்றனர். பாஜகவும் காங்கிரஸும் பிராமணர்கள் கட்சி.. ராமர் கோவிலை கட்டியிருந்தாலும் பணம் கொடுத்தால்தானே நாங்களே உள்ளே போக முடியும்? என்கிற பார்வையை முன்வைக்கின்றனர்.

மதச் சார்பும் குண்டர்களும்: இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில், நீங்கள் ராமர் கோவில் கட்டுவது எல்லாம் சரிதான்.. ஆனால் எப்போதும் ஒரு மதம், ஒரு பிரிவினரை மட்டுமே முன்னிறுத்துவது எப்படி சரியாகும்? நிழல் உலக தாதாக்கள் இல்லை என்று இப்போது சொல்ல முடியுமா? இன்னமும் நிழல் உலக தாதாக்களும் குண்டர்களும் உலா வரத்தான் செய்கின்றனர் என்கின்றனர்.

பாஜகவுக்கு எதிர்ப்பு: இதேபோல 2019 தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தோம்.. பலரையும் பாஜகவுக்காக ஓட்டுப் போடவும் வைத்து பிரசாரம் செய்தோம். இந்த முறை அப்படி செய்ய மனம் வரவில்லை. எங்களால் பாஜகவுக்கு ஓட்டு கேட்க முடியாத அளவுக்குதான் நிலைமை இருக்கிறது என்கின்றனராம் பாஜக ஆதரவாளர்கள்.

காங்கிரஸ் ஆதரவு மனநிலை: ரேபரேலி, அமேதி தொகுதிகளில் பாஜக எதிர்ப்பு மனநிலையை உணர முடிகிறதாம். ஜாதிகள் அடிப்படையில் பிராமணர்கள், பார்சிகளிடம் உரையாடிய போதும் கூட பாஜக எதிர்ப்பு இருப்பதையும் காங்கிரஸுக்கு ஆதரவு மனநிலை இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிகிறதாம்.

நடக்கவே நடக்காதாம்: உத்தரப்பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதி விவசாயிகளும் மத்தியில் ஆளும் பாஜக அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் அதிருப்தியை கொட்டுகின்றனர். விவசாயிகளிடையே காணப்படும் உக்கிரமான அதிருப்தி என்பது பாஜக தலைவர்கள் சொல்வதைப் போல 70, 75 இடங்களையும் அள்ளுவோம் என்கிற கணக்கை தகர்த்து எறிவதாகவே இருக்கும்.

அத்தனை ஜாதியும் கோபம்?: உத்தரப்பிரதேசத்தில் பொதுவாக ஜாதிய இறுக்கம் மிக அதிகம். உத்தரப்பிரதேசத்தில் உரையாடிய பெரும்பாலான ஜாதிகள் கட்டுக் கோப்பாக "பாஜக" எதிர்ப்பில் உறுதியாக இருக்கின்றன. நிச்சயம் உத்தரப்பிரதேசத்தின் கள நிலவரத்தை வேறு மாதிரியாக வெளிப்படுத்தப் போகிறது என்பதையே இந்த உணர்வுகள் சொல்கின்றன. இவ்வாறு The wire ஊடகத்தின் செய்திகளில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+