"மிஷன் அமேதி.." இந்த முறை மிஸ் ஆகாது.. ராகுல் போடும் ஸ்கெட்ச்! உற்று நோக்கும் பாஜக.. கள நிலவரம் என்ன
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதி ரொம்பவே முக்கியமானதாகும். கடந்த காலங்களில் பல முக்கிய தேர்தல்கள் இங்கே நடந்துள்ளன. இது இப்போது 2024இல் மற்றொரு முக்கிய தேர்தலுக்கு ரெடியாகி வருகிறது.
சஞ்சய் காந்தி, ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரை லோக்சபாவுக்கு அனுப்பிய தொகுதியாக இது இருக்கிறது. பல ஆண்டுகளாக காங்கிரஸ் வலுவாக இருந்த தொகுதிகளில் இதுவும் ஒன்று.

இருப்பினும், 2019 லோக்சபா தேர்தலில் அமேதி காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது. பாஜகவின் ஸ்மிருதி இரானி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வீழ்த்தி மிக பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தார்.
அமேதி தொகுதி: அமேதி என்பது முழுக்க முழுக்க கிராமப்புற மக்கள் அதிகம் இருக்கும் தொகுதியாகும். இங்குள்ள வாக்காளர்களில் 96 சதவீதம் பேர் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்கள்.. வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே நகர்ப்புறத்தில் வசிக்கிறார்கள். மேலும், இங்குப் பட்டியலினத்தவரும் கணிசமாக இருக்கிறார்கள். இங்குள்ள மக்கள்தொகையில் சுமார் 26.6 சதவீதம் பேர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் ஆகும்..
மக்கள் தொகை: மேலும், மத ரீதியாகப் பார்க்கும் போது இங்கு சுமார் 85% இந்துக்களும் 15 சதவீத இஸ்லாமியர்களும் வசிக்கிறார்கள். கடந்த ஐந்து லோக்சபா முடிவுகளை ஆய்வு செய்யும் போது அங்குக் காங்கிரஸ் வாக்கு வங்கி கடந்த 2009 முதல் கணிசமாகக் குறைந்தே வந்துள்ளது. 2009இல் அங்குப் போட்டியிட்ட ராகுல் காந்தி அதிகபட்சமாக 71.8 சதவீத வாக்குகளைப் பெற்றார். 2014இல் அது 46%ஆக குறைந்த போதிலும், அவர் வென்றார். 2019இல் அவர் பெற்ற வாக்குகள் 43%ஆக மேலும் குறைந்த நிலையில், பாஜகவின் ஸ்மிருதி இரானி தேர்தலில் வென்றார்.
உத்தர பிரதேசத்தில் வலுவாக இருக்கும் சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் அமேதியில் போட்டியிட்டதே இல்லை. காங்கிரஸ் கோட்டையாக இருப்பதாலும் அக்கட்சித் தலைவர்களுக்கு மரியாதை தரும் வகையிலும் இந்த இரு கட்சிகளும் அமேதியில் வேட்பாளர்களை நிறுத்த மாட்டார்கள்.
நேரு குடும்பம்: இந்த அமேதி தொகுதிக்கும் நேரு குடும்பத்திற்கும் இருக்கும் தொடர்பு நீண்ட நெடியது. பல காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் இங்குப் போட்டியிட்டுத் தான் வென்றுள்ளார்கள். 1980இல் சஞ்சய் காந்தி போட்டியிட்டார். அதன் பிறகு 1981-19911 வரை ராஜிவ் காந்தி, 1999-2004 சோனியா காந்தி, அதன் பிறகு ராகுல் காந்தி இங்கிருந்து தான் எம்பியாக இருந்துள்ளனர்.
இருப்பினும், ஸ்மிருதி இரானி கடந்த 2019இல் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அந்தத் தேர்தலில் ராகுல் காந்தி 43%, அதாவது 4.13 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றார். அதேநேரம் பாஜகவின் ஸ்மிருதி இரானி 49%, அதாவது 4.68 லட்சம் வாக்குகளைப் பெற்று வென்றார். ஆனால், வரும் தேர்தலில் ஸ்மிருதி இரானி இவ்வளவு ஈஸியாக வெல்ல முடியாது என்றே வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
கள நிலவரம் என்ன: அமேதி லோக்சபா தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகள் பாஜக மற்றும் சமாஜ்வாடி கட்சிகள் வசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடன் சமாஜ்வாடி கூட்டணி வைத்துள்ளதால் அவர்கள் வாக்கு காங்கிரசுக்கு வரும். இது போக நேரு குடும்பத்திற்கு வரும் பரம்பரை வாக்குகள் வரும். மேலும் உள்ளூர் மக்கள் ஸ்மிருதி இரானி இடையே கடும் போட்டி இருக்கும் என்றே கூறப்படுகிறது.
அமேதி தொகுதியைப் பொறுத்தவரை பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி தான் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளரை அறிவிக்கவில்லை. கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடும் நிலையில், அங்கே வாக்குப்பதிவு முடிந்த பிறகே அமேதி தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கக் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
ராகுல் காந்தியைத் தவிர வேறு யார் போட்டியிட்டாலும் அது பாஜகவுக்குச் சாதகமாகப் போகும் என்பதால் ராகுல் காந்தியே இங்குப் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. இதன் காரணமாக இந்த முறை மிகக் கடுமையான மோதல் இருக்கும்.












Click it and Unblock the Notifications