2024 மட்டுமில்லை 2029 ஆனாலும் மோடி தான்..பளிச்சென பேசிய ராஜ்நாத் சிங்! அப்போ மத ரீதியான இட ஒதுக்கீடு
லக்னோ: 2024 தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவியில் மோடி இருக்க மாட்டார் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், 2024 தேர்தலில் மட்டும் அல்ல 2029ஆம் ஆண்டிலும் மோடியே நாட்டின் பிரதமராக இருப்பார் என உறுதியாக பேசியுள்ளார்.
இந்திய நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் லோக்சபா தேர்தல் 2024 நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்கு பதிவு நிறைவடைந்து இருக்கும் நிலையில் இன்னும் மூன்று கட்ட வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.

ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் நிலையில் ஜூன் ஒன்றாம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மறுபுறம் இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஆம் ஆத்மி கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ஜாமினில் இருந்து வெளிவந்த உடனே தனது பிரச்சாரத்தை துவக்கினார் அரவிந்த் கெஜ்ரிவால். எடுத்த எடுப்பிலேயே மோடி மீதான தாக்குதலையே தொடுத்திருக்கிறார். பாஜகவில் 75 வயதுக்கு மேல் அரசியலில் ஓய்வு பெற்று விட வேண்டும்..
முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி உள்ளிட்டோர் அரசியலில் இருந்து பாஜக ஓரம் கட்டியது இந்த காரணத்தினால்தான். எனவே தேர்தல் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளில் 75 வயதை சந்திக்கும் பிரதமர் மோடி அந்த பதவியில் தொடர மாட்டார் எனக் கூறியிருந்தார். அவருக்கு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா பதிலடி கொடுத்திருந்தார். பாஜகவில் 75 வயதை கடந்தால் ஓய்வு என்ற விதி எதுவும் கிடையாது, பிரதமர் நரேந்திர மோடிதான் தொடர்பார் என திட்டவட்டமாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் அமித் ஷாவின் கருத்தை ஆமோதித்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அவர் இது தொடர்பாக பேசிய போது அரசியலமைப்பின் முகப்பு உரையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பது எங்கள் அனைவரும் விருப்பம். ஆனால் 1976-ல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது அதை காங்கிரஸ் செய்தது. மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடையாது என்பது தான் அரசியல் சாசனத்தில் கூறப்பட்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டைப் பொறுத்தவரை தற்போதுள்ள நடைமுறை தொடரும் என பிரதமர் நரேந்திர மோடி கூறுகிறார்.
ஆனால் எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியலுக்காக மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள். இந்த முறை பாஜக தலைமை வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க போகிறது. இதனை நாங்கள் அல்ல நாடு முழுவதும் இருக்கும் அரசியல் நிபுணர்கள் சொல்லி வருகின்றனர். 543 தொகுதிகளில் 400 தொகுதிகளை வெல்ல வேண்டும் என்ற இலக்குடன் நாங்கள் முன்னேறி வருகிறோம். 75 வயதுக்கு பிறகு பிரதமர் ஓய்வு பெற்று விடுவார் என்ற அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்து முட்டாள்தனமானது. அபத்தமானது 2024 மட்டுமல்ல 2029ல் பிரதமர் பதவியில் நரேந்திர மோடி தான் இருப்பார்
2024 க்கு பிறகு பிரதமர் பதவியில் மோடி இருக்க மாட்டார் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறியது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. கெஜ்ரிவால் தற்போது ஜாமினில் வெளிவந்திருக்கிறார். இரண்டாம் தேதி அவர் மீண்டும் சிறை செல்ல வேண்டும். ஆனால், அவரோ பிரதமரை பற்றி முட்டாள்தனமாக பேசுகிறார். 2029 ஆம் ஆண்டிலும் மோடி தான் பிரதமர் ஆக வேண்டும் என்று நாடு விரும்புகிறது" என கூறினார்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications