மதம் மாற மறுத்த கள்ளக்காதலி.. கொன்று ஹாலில் புதைத்து.. அதன் மீது பல மாதம் வாழ்ந்த நபர்.. லக்னோ ஷாக்!
மதம் மாற மறுத்த கள்ளக்காதலி கொலை செய்தார் உபி இளைஞர் ஒருவர்
லக்னோ: முஸ்லிம் மதத்துக்கு மாறுவதற்கு கள்ளக்காதலி மறுத்துவிட்டாராம்.. அதனால் அந்த ஆத்திரத்தில் காதலியை கொன்று புதைத்துவிட்டு, அந்த பிணத்தின் மேலேயே ஒருத்தர் பல மாசம் வாழ்ந்து வந்துள்ள சம்பவம் தூக்கி வாரி போட்டுள்ளது.
உத்திரபிரதேச மாநிலம் மீரட்டில் பர்தாபூர் என்ற பகுதி உள்ளது... இங்கு வசித்து வந்த இஸ்லாமிய இளைஞர் பெயர் ஷம்சாத்.. இவருக்கு கல்யாணம் ஆகி, டைவர்ஸும் ஆகிவிட்டது.

இதனிடையே ஒரு இந்து பெண்ணோடு கள்ளக்காதல் வைத்து கொண்டார்.. 4 வருஷம் ஒன்றாகவே 2 பேரும் வாழ்ந்துள்ளனர்.. ஆனால் அந்த பெண்ணுக்கு ஏற்கனவே கல்யாணமாகிவிட்டது.
10 வயசில் ஒரு பெண் குழந்தையும் இருக்கிறாள்.. இந்த கள்ளக்காதல் ஜோடி தனியாக வீடு எடுத்து வாழ்ந்து கொண்டு வந்துள்ளது.. அந்த குழந்தையும் இவர்களுடன்தான் இருந்திருக்கிறாள்.
இந்நிலையில் ஷம்ஷத், தன் கள்ளக்காதலியை முஸ்லிம் மதத்துக்கு மாறுமாறு கட்டாயப்படுத்தி வந்தார்.. ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.. இது சம்பந்தமாக அடிக்கடி இவர்களுக்குள் சண்டை வந்து போயுள்ளது.
கடந்த மார்ச் மாதம் இப்படி ஒரு தகராறு வெடித்து, அந்த பெண்ணை ஷம்ஷத் கொன்றே விட்டார்.. அவரைதான் கொன்றார் என்றால், அந்த 10 வயது குழந்தையையும் சேர்த்து கொன்றுவிட்டார்.. 2 சடலத்தையும் தன் வீட்டு ஹாலிலேயே புதைத்து விட்டார்.. அந்த சடலம் மேலதான் கடந்த 4 மாசமாக நடமாடியும், வாழ்ந்தும் வந்துள்ளார்.
இந்த சமயத்தில்தான், இறந்த அந்த பெண்ணின் தோழிக்கு சந்தேகம் வலுத்துள்ளது.. ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், தாயும், மகளையும் காணோம் என்று குழப்பத்திலேயே இருந்துள்ளார்.. பிறகு அதே பகுதியில் இருந்த ஸ்டேஷனில் தோழியை காணோம் என்று புகாரும் தந்தார்.. அப்போதுதான் ஷம்சாத் சிக்கினார்.
வீட்டுக்குள்ளேயே சடலம் புதைக்கப்பட்டது என்று அவர் சொன்னதை கேட்டு போலீசார் அதிர்ந்தனர்.. பிறகு முற்றத்தில் புதைக்கப்பட்ட இடத்தை தோண்டி, உள்ளே இருந்த 2 பிணங்களின் எலும்புக்கூடுகளை கைப்பற்றினர்... இந்த விசாரணை, ஆய்வு நடந்து கொண்டிருக்கும்போதெ, ஷம்சாத் காணாமல் போய்விட்டார்.. அவரை இப்போது தேடி வருகிறார்கள் போலீசார்.
-
காலையில் கஞ்சா பால்.. இட்லிக்கு கஞ்சா சட்னி.. பெட் ரூம் முழுக்க 70 கஞ்சா செடிகள்.. மிரண்ட போலீஸ் -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications