லவ் லெட்டர்.. "படித்தவுடன் கிழித்து விடவும்".. காதல் ரசம் சொட்ட சொட்ட மாணவிக்கு எழுதியது பார் பாருங்க
பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார் அவரது வகுப்பு ஆசிரியர்
லக்னோ: மாணவர்கள் மாணவிகளுக்கோ அல்லது மாணவிகள் மாணவர்களுக்கோ காதல் கடிதங்களை பரிமாறி கொள்வார்கள்.. ஆனால், இங்கே ஒருவர் வித்தியாசமான காதல் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.. காதல் கடிதத்தைவிட, அக்கடிதத்தை எழுதியவர்தான் பலருக்கும் அதிர்ச்சி கிளப்பி கொண்டிருக்கிறார்.
பள்ளி மாணவிகள் பல இடங்களில் பாலியல் தொல்லைகளை சந்தித்து வருவது அதிகமாகிவிட்டது.. நடந்து வரும் சம்பவங்கள் எல்லாம் மிகவும் வேதனை அளிப்பதாக கல்வி அதிகாரிகளும், பொதுமக்களும் வேதனை தெரிவித்து வருகிறார்கள்..
ஆசிரியர்கள்தான் இப்படி நடந்து கொள்கிறார்கள் என்றால், இவர்களை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர்களே பாலியல் அத்துமீறில்களில் நடந்து கொள்வது அதிர்ச்சியை தந்து வருகிறது.

லவ் லெட்டர்
அப்படித்தான் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமான சம்பவமாக உள்ளது.. உத்தரப்பிரதேச மாநிலத்தில் கன்னோஜ் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அங்கு சதார் கொத்வாலி என்று ஒரு கிராமம் உள்ளது.. அந்த கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது... இந்த பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு, ஒரு ஆசிரியர் லவ் லெட்டர் எழுதியுள்ளார்.. அவர் பெயர் ஹரி ஓம் சிங்.. லவ் லெட்டரை எழுதி அந்த மாணவியிடமே தந்துள்ளார்..

லவ் லெட்டர்
அந்த லவ் லெட்டரில், "உன்னை நான் அதிகம் விரும்புகிறேன்... ஸ்கூல் லீவு விடும்போதெல்லாம் எனக்கு வருத்தமாக இருக்கிறது.. விடுமுறை காலத்தில் நீ இல்லாதது எனக்கு இன்னும் அதிகம் வருத்தத்தை தருகிறது... எப்போது முடியுமோ அப்போது எனக்கு போன் பண்ணி பேசு.. ஆனால், தேர்வு கால விடுமுறை விடுவதற்கு முன்பு, தனியாக என்னை வந்து நீ சந்திக்க வேண்டும்.. இது என் ஆசை.. உன்னை கல்யாணமும் செய்து கொள்ள விரும்புகிறேன்" என்று அந்த கடிதத்தில் எழுதியிருக்கிறார்.. மொத்தம் 12 வரிகளுக்கு அந்த லெட்டர் உள்ளதாம்..

கல்யாணம்
அதுமட்டுமல்ல, "இதை படித்தவுடன் கிழித்து எறிந்து விடவும்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.. இந்த லெட்டரை படித்ததும் அந்த மாணவிக்கு தூக்கி வாரிப்போட்டுள்ளது.. உடனே தன்னுடைய பெற்றோரிடம் சொல்லி, அந்த கடிதத்தை தந்துள்ளார்.. பெற்றோர் அந்த கடிதத்தை பார்த்து விட்டு, அதற்கு மேல் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள்... பிறகு, உடனே, அந்த ஆசிரியருக்கு போனை போட்டு பேசி, லெட்டர் குறித்து கேட்டுள்ளனர்.. அதற்கு அந்த ஆசிரியர், கொஞ்சம் கூட அசரவேயில்லையாம்.. தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று கெத்தாக சொன்னாராம்..

அடங்கலையே
இப்படியே போன் செய்து தொந்தரவு செய்தால், மாணவியை கடத்தி சென்று கல்யாணமே செய்து கொள்வேன் என்று பெற்றோரையே மிரட்டி இருக்கிறார். இதனால் பெற்றோர் வாயடைத்து போய் போனை கட் செய்துள்ளனர்.. ஆனால், ஆசிரியர் அடங்கவேயில்லை.. வேறு வேறு நம்பர்களில் இருந்து போனை போட்டு, மாணவியின் அப்பாவுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.. இதையடுத்து அந்த மாணவியின் அப்பா, வேறு வழியில்லாமல் போலீசில் சென்று பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்திருக்கிறார்... கன்னோஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்திருக்கிறாராம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications