உ.பி. லோக்சபா தேர்தல் களத்தில் பாஜகவை பதம் பார்க்கப் போகிறதா ராகுல்- அகிலேஷின் ‘சமூகநீதி’ வியூகம்?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள் பாஜக எதிர்பார்ப்பது போல இருக்காது என ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் இடைவிடாமல் பேசி வருவதற்கு இருவரது 'சமூகநீதி' வியூகம்தான் காரணம் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
சமூக நீதியை பன்னெடுங்காலமாக உரத்துப் பேசி வருகிறது திராவிடர் இயக்கமும் தமிழ்நாடும். 100 ஆண்டுகளுக்கு முந்தைய தென்னிந்திய நல உரிமைச் சங்கம், சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டை ஆளும் திராவிட கட்சிகள் என சமூக நீதிப் பயணம் மிக நீண்டது.

வட இந்தியாவும் சமூக நீதியும்: ஆனால் வட இந்தியாவில் 1990களில் வீசிய மண்டல் கமிஷன் புயல்தான் சமூக நீதியை வேர்பிடித்து நிற்க வைத்தது. ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அரசியல் எழுச்சிக்கு சமூக நீதி முழக்கம் 1990களில் உறுதியான ஆதரவைக் கொடுத்தது. இதனால்தான் முலாயம் சிங், மாயாவதி, லாலு பிரசாத் யாதவ், நிதிஷ்குமார் உள்ளிட்டோர் முதல்வர் நாற்காலியில் அமர முடிந்தது. ஒருவகையில் காங்கிரஸுக்கு வடக்கே அத்தியாயத்தை முடித்து வைத்ததும் கூட இந்த சமூகநீதிதான்.
சரித்திரம் படைத்த சமாஜ்வாதி கட்சி: கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் அதிவேகமான இந்துத்துவா அரசியல், இடைவிடாத அதிகாரம் அத்தனையும் எதிர்க்கட்சிகளையே இல்லாததாக்கும் நிலைமைதான் இருந்தது. ஆனால் காலம் கடந்தேனும் எதிர்க்கட்சிகள் ஓரணியில் நின்று காட்டுகின்றன. 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 40%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது. அதேநேரத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும் முன் எப்போதும் இல்லாத வகையில் 36 சதவீத வாக்குகளைப் பெற்று பாஜகவை அதிர்ச்சி அடைய வைத்தது. பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸின் வாக்கு வங்கி காணாமலேயே போனது.
என்ன செய்தார் அகிலேஷ் யாதவ்?: அதாவது பகுஜன் சமாஜ் கட்சிக்கான தலித்துகள் வாக்குகளும் காங்கிரஸின் பொதுவான வாக்குகளும் சமாஜ்வாதி கட்சிக்கு திசை திரும்பியதுதான் அக்கட்சியின் வாக்கு சதவீதம் அதிகரிக்கக் காரணம். தற்போதைய லோக்சபா தேர்தலில் இதனை மிக மிக கெட்டியாகவே பிடித்துக் கொண்டார் அகிலேஷ் யாதவ். யாதவர்களுக்கான கட்சியாக சமாஜ்வாதி கட்சியை நடத்தாமல் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்கள் அனைவருக்குமான பரந்துபட்ட கட்சியாக சமாஜ்வாதியை கட்டமைத்துவிட்டார் அகிலேஷ் யாதவ். லோக்சபா தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்விலேயே இந்த அதிரடியைத்தான் காட்டி இருந்தார் அகிலேஷ். பொதுத் தொகுதிகளிலும் தலித்துகளை நிறுத்தினார்.. யாதவர்களுக்கு மட்டுமல்லாமல் இதர பிற்படுத்தப்பட்ட, இதுவரை புறக்கணிக்கப்பட்ட ஜாதியினருக்கும் வேட்பாளர் தேர்வில் வாய்ப்பு கொடுத்தார். தலித்துகளிலும் புறக்கணிக்கப்பட்ட ஜாதியினரைத் தேடித் தேடி வாய்ப்பு தந்தார் அகிலேஷ் யாதவ். அனைவருக்குமான சமூகநீதியையே தேர்தல் வியூகமாக அகிலேஷ் யாதவ் செயல்படுத்தினார்.
கை கோர்த்த ராகுல்: இப்படியாக அகிலேஷ் யாதவின் வியூகத்துடன் லோக்சபா தேர்தல் அறிக்கையையே சமூகநீதி செயல் திட்டமாக வெளியிட்ட ராகுல் காந்தியும் கை கோர்த்தால் களம் அதகளம்தானே. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பின் மூலமாக கூடுதலான இடஒதுக்கீடு வாய்ப்பு என்பவை எல்லாம் ராகுல்- அகிலேஷ் இணையரின் வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகள், இவர்களது புதிய பாய்ச்சல்தான் உ.பி. லோக்சபா தேர்தல் களத்தில் பாஜகவை பதற வைத்துக் கொண்டிருக்கிறது; கணிசமான தாக்கத்தை அகிலேஷ்- ராகுல் அண்ட்கோ வாக்காளர்களிடம் உருவாக்கி வைத்துள்ளதால்தான் பாஜக எதிர்பார்த்த ரிசல்ட்டை உ.பி.யில் பெறவே முடியாது என்கிற பேச்சுகள் எழுந்து கொண்டே இருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications