அச்சுறுத்தும் லம்பி வைரஸ்.. வெளிமாநிலங்களில் இருந்து கால்நடைகளை கொண்டு செல்ல தடை.. யோகி உத்தரவு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் லம்பி வைரஸ் பரவல் பீதி ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்கும் வகையில் பிற மாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கால்நடைகள் கொண்டு செல்ல தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
கால்நடைகள் லம்பி வைரஸ் பாதிப்பு என்பது அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. பொதுவாக லம்பி வைரஸ் பாதிப்பு என்பது கால்நடைகளுக்கு பரவும் ஒரு வகை அம்மை நோயாகும். இது ஈ, கொசு, ஒட்டுண்ணிகள் மூலம் பரவும்.

இந்த வைரஸ் பாதித்த கால்நடைகளின் உடலில் கட்டி உருவாகும். மேலும் நோய் பாதித்த மாடுகளின் பால் குடிக்கும் கன்றுகளுக்கும் இந்த நோய் என்பது பரவும் தன்மை கொண்டாகும். இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் லம்பி வைரஸ் பாதிப்புக்கான பீதி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கால்நடை அதிகாரிகளுக்கு அதிரடியாக சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் லம்பி வைரஸ் பாதிப்பில் இருந்து கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நோய் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். அதோடு பிற மாநிலங்களில் இருந்து உத்தர பிரதேசத்துக்கு கால்நடைகள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
மேலும் மாநிலத்தில் கால்நடை கண்காட்சி நடத்துவதை தடுக்க வேண்டும். நோய் தொற்றின் அறிகுறிகளை அறிந்து முன்கூட்டியே சிகிச்சை வழங்க வேண்டும். இதுதொடர்பாக பால் பண்ணையாளர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். மேலும் பசு பாதுகாப்பங்களிலும் பிற கால்நடைகள் உள்பட மனிதர்களின் என்ட்ரியை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு லம்பி வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த வேண்டும்.
கொசுக்கள் மூலம் லம்பி வைரஸ் பரவல் ஏற்படுகிறது. இதனால் கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஊரக வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சி, கால்நடை பராமரிப்பு துறைகளை ஒருங்கிணைத்து தூய்மை பிரசாரங்களை முன்னெடுக்க வேண்டும். நோய் பாதித்த கால்நடைகளில் இருந்து பிற கால்நடைகளுக்கும் இந்த நோய் என்பது பரவ வாய்ப்புள்ளது. இதனால் நோய் பாதித்த கால்நடைகளை தனித்தனியே பராமரிக்க வேண்டும்.
தற்போது மாநிலத்தில் 6,889 கால்நடை பாரமரிப்பு மையங்கள் உள்ளன. இதில் மொத்தம் 11.89 லட்சம் பசுக்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. பசு பாதுகாப்புக்கான முதல் அமைச்சர் சஹாபகீதா திட்டம் பசு பாதுகாப்பில் நல்ல பலனை தந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் பசு உள்பட மாடுகளை பாதுகாப்பு பணியில் ஈடுபடும் ஊழியர்களின் குடும்பங்களுக்கு ஒரு மாட்டுக்கு ரூ.30 என உணவுக்கு ஒதுக்கப்படும் நிதியை ரூ.50 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்'' என கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications