மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்...பிரதமர் இரங்கல்!!
லக்னோ: மத்தியப்பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் இன்று லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் காலமானார்.
காய்ச்சல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய காரணங்களால் லக்னோவில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்தார். நீண்ட நாட்கள் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.

கடந்த ஜூன் 11 ஆம் தேதியில் இருந்து சிகிச்சை பெற்று வந்த இவருக்கு வயது 85. இவரது மரணத்தை இவரது மகன் அஷுதோஷ் டாண்டன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். பாபுஜி காலாமானார் என்று குறிப்பிட்டுள்ளார்.

இவரது மரணத்துக்கு பிரதமர் மோடி உள்பட பல தலைவர்கள் வருத்தம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். சமூகத்துக்கு களைப்பில்லாமல் பணியாற்றியவர் லால்ஜி. அரசிலமைப்பு சட்டத்தை நன்கு அறிந்தவர். அடல்ஜியுடன் நெருங்கிய நீண்ட நாட்கள் தொடர்பில் இருப்பவர். இந்த நேரத்தில் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக லால்ஜியின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்டு இருந்த மெதந்தா மருத்துவமனை, வென்டிலேட்டரில் இருக்கும் லால்ஜி உடல் நலம் தேறி வருகிறார் என்று தெரிவித்து இருந்தது.
உத்தரப்பிதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேலிடம் கூடுதலாக மத்தியப்பிரதேச ஆளுநர் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications