Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்பமேளா கூட்ட நெரிசல்.. ஏசி கோச்சில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து ரயிலுக்குள் ஏற முயன்ற பயணிகள்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேசம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா நடந்து வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கானோர் அங்கு சென்று புனித நீராடி வருகிறார்கள். இதனால் ரயில்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதில் ஏசி ரயில் ஒன்றில் ஏறுவதற்கு இடம் கிடைக்காததால், ரயிலின் ஏசி கோச்சில் உள்ள கண்ணாடியை உடைத்து பயணிகள் ஏற முயன்ற சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் பரவி வருகின்றன.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த மாதம் 13 ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதிலும் இருந்து ஆன்மிக பெரியவர்கள், துறவிகள், சாதுக்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர். 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

Uttar Pradesh train Maha Kumbh Mela

இதனால் பிரயாக்ராஜ் நகருக்கு பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிரதமர் மோடி கடந்த 5 ஆம் தேதி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். மேலும் வெளிநாட்டு தலைவர்களும், பிரதிநிதிகளும் புனித நீராடினர். மகா கும்பமேளாவில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதால், அந்த நகரம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.

விசேஷ நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவுகிறது. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணி வகுத்து நின்றன. வாகனங்கள் ஒரு இடத்தை கடந்து செல்வதற்கு பல மணி நேரம் ஆனது. குறிப்பாக வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் பிரயாக்ராஜ் நகருக்குள் செல்வதற்கு ஒரு நாள் வரை காத்திருந்தனர்.

அதேபோல வாரணாசி செல்லும் ரயில்களிலும் கடுமையான கூட்ட நெரிசல் உள்ளது. சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும் கூட கூட்ட நெரிசலை சமாளிக்க அது போதுமானதாக இல்லை. முன்பதிவு செய்த பெட்டிகளில் கூட ஓபன் டிக்கெட் எடுத்த பயணிகள் ஏறி பயணம் செய்யும் நிகழ்வையும் பார்க்க முடிகிறது. இதனிடையே, பீகார் ரயில் நிலையத்தில் நேற்று வாரணாசி சென்ற ரயிலில் ஏற பயணிகள் போட்டா போட்டி போட்டனர்.

ஸ்வந்தரதா சேனானி சூப்பர் எக்ஸ்பிரஸ் ரயில் வந்த போது பயணிகளுக்கு இடம் பிடிக்க முண்டியடித்தனர். இடம் கிடைக்காத விரக்தியில் ஏசி பெட்டிகளின் ஜன்னல் கண்ணாடிகளை கற்களை கொண்டு உடைத்தனர். இதனால் ரயிலுக்குள் இருந்த பயணிகள் அச்சத்தில் உறைந்தனர். இந்த களேபரத்தால் ரயில் சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. ரயிலின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்த பயணிகளை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+