45 நாட்களில் ரூ.30 கோடி.. மகா கும்பமேளாவில் கலக்கல் வருமானம் பார்த்த படகு உரிமையாளர்.. இது சூப்பர்ல

Subscribe to Oneindia Tamil

லக்னோ: மகா கும்பமேளா சமயத்தில் படகு ஓட்டுநர் ஒருவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார். இதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை பாராட்டியும் இருந்தார். இதற்கிடையே குறுகிய நாட்களில் ரூ.30 கோடி சம்பாதிக்க என்ன காரணம்? இதைச் சாத்தியப்படுத்தியது என்ன? என்பது குறித்த தகவல்களை நாம் பார்க்கலாம்.

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் இந்துக்களின் மிகப் பெரிய மத ஒன்றுகூடல் நிகழ்ச்சியான மகா கும்பமேளா நடைபெற்றது. இது 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும்.

Mahakumbh Mela 2025 Spirituality Uttar Pradesh

ரூ.30 கோடி

கடந்த ஜனவரி 13ம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா பிப்ரவரி 26 வரை நடைபெற்றது. இந்த மகா கும்பமேளா நிகழ்வில் பல கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதற்கிடையே மகா கும்பமேளா சமயத்தில் படகு ஓட்டுநர் பிந்து மஹ்ரா என்பவர் 45 நாட்களில் ரூ.30 கோடி சம்பாதித்துள்ளார். இதற்காக உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அவரை பாராட்டியும் இருந்தார். குறுகிய நாட்களில் அவர் எப்படி 30 கோடி சம்பாதித்தார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்

அதாவது மகா கும்பமேளாவுக்கு முன்பு பிந்து மஹ்ராவிடம் 60 படகுகள் மட்டுமே இருந்துள்ளன. ஆனால், கும்பமேளா சமயத்தில் கூட்டம் அதிகரிக்கும்.. இதனால் தேவையும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த பிந்து மஹ்ரா படகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்க முயன்றுள்ளார். இதன் மூலம் அதிகம் லாபம் பார்க்கலாம் என்பதே அவரது கணக்கு. ஆனால், படகுகளின் எண்ணிக்கை அதிகரிக்கத் தேவையான பணம் அவரிடம் இல்லை.

ரிஸ்க்

இதனால் என்ன செய்வது என்று யோசித்த பிந்து மஹ்ரா, மகா கும்பமேளாவுக்கு முன்பு வீட்டில் இருந்த எல்லா நகைகளையும் விற்றுள்ளார். மேலும், சொந்தமாகக் கொஞ்சம் நிலம் இருந்த நிலையில், அதையும் அடகு வைத்து பணத்தைத் திரட்டியுள்ளார். பிறகு அதை வைத்தே தன்னிடம் இருந்த படகுகளின் எண்ணிக்கையை 60ல் இருந்து 130ஆக உயர்த்தியிருக்கிறார்..

ஆரம்பத்தில் இந்த ரிஸ்க் எடுக்கப் பிந்து மஹ்ரா யோசித்துள்ளார். எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் வரவில்லை என்றாலோ அல்லது வேறு எதாவது எதிர்பாராத விதமாக நடந்தாலோ அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பிந்து மஹ்ரா பயந்துள்ளார். ஆனால், மகா கும்பமேளாவில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் படகு சேவையும் அதிகரித்தது. இதனால் வருமானமும் அதிகரித்து ரிஸ்க்கிற்கு ஏற்ப ரிவார்ட் கிடைத்துள்ளது..

என்ன செய்தார்?

இது குறித்துப் பிந்து மஹ்ரா மேலும் கூறுகையில், "மகா கும்பமேளாவுக்கு முன்பு வாழ்க்கை கடினமாகவே இருந்தது. இதனால் நகைகளை எல்லாம் விற்க வேண்டுமா எனச் சற்று யோசித்தோம். இருந்தாலும் துணிந்து ரிஸ்க் எடுத்தோம். தங்கத்தை அடைமானம் வைக்க வேண்டியிருந்தது. நிலத்தையும் அடகு வைத்து பணத்தைத் திரட்டினோம். படகுகளை எல்லாம் தயார் செய்யவே எங்களுக்கு ஆறு மாதங்கள் வரை ஆனது" என்றார்.

முதல்வர் யோகி பாராட்டு

45 நாட்களில் ரூ.30 கோடி வருமானத்தை ஈட்டிய பிந்து மஹ்ராவின் இந்த முயற்சி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இது தொடர்பாக அம்மாநிலச் சட்டசபையிலேயே பேசியிருந்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "மகா கும்பமேளா என்பது உத்தரப் பிரதேசத்திற்குப் பொருளாதார ரீதியாக மிகப் பெரியளவில் உதவியுள்ளது. இது எங்கள் மாநில பொருளாதாரத்திற்கு சுமார் ₹3.5 லட்சம் கோடி பங்களித்துள்ளது. உள்ளூர் வணிகங்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்களுக்கு என அனைத்து தரப்பினும் வருமானம் பார்த்துள்ளனர்.

குறிப்பாக 130 படகுகளை வைத்திருக்கும் ஒருவர் 45 நாட்களில் 30 கோடி ரூபாய் வருமானத்தை ஈர்த்துள்ளார். இது நம்பிக்கை மற்றும் கடின உழைப்பிற்குக் கிடைத்த பலன். இதுபோல பலரது வாழ்க்கையை மகா கும்பமேளா மாற்றி இருக்கிறது" என்றார்.

நிதி ஒதுக்கீடு

மகா கும்பமேளாவுக்கு மாநில அரசு ரூ.7500 கோடி ஒதுக்கி இருந்தது. இதன் கீழ் உட்கட்டமைப்பு மேம்படுத்தப்பட்டது. அதேநேரம் மகாகும்பமேளா மூலம் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். குறிப்பாகப் போக்குவரத்துத் துறைக்கு ரூ.1.5 லட்சம் கோடி, ஹோட்டல் துறைக்கு ரூ.40 ஆயிரம் கோடி, உணவுக்கு ரூ.33 ஆயிரம் கோடி வருமானம் கிடைத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+