ரேஷனில் 10 கிலோ இலவச அரிசி.. ‛இந்தியா’ கூட்டணி ஆட்சியில் அமல்.. மல்லிகார்ஜுன கார்கே அறிவிப்பு
லக்னோ: மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ரேஷனில் 10 கிலோ இலவச அரிசி வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
நம் நாட்டில் மொத்தம் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து வருகிறது. தற்போது 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இன்னும் 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன. இதில் உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இருக்கும் தொகுதிகளில் இன்னும் தேர்தல் நடைபெற வேண்டி உள்ளது.
உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இதில் சமாஜ்வாதி கட்சி 63 இடங்களிலும், காங்கிரஸ் 17 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது.

ஹைவோல்டேஜ் தொகுதிகளாக கருதப்படும் ராகுல் காந்தி போட்டியிடும் ரேபரேலி தொகுதிக்கு வரும் 20ம் தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல் பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதிக்கு ஜுன் 1ம் தேதி தான் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மற்றும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று மல்லிகார்ஜுன கார்கே, அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
அப்போது மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சியை பிடித்தால் ரேஷனில் வழங்கப்படும் இலவச அரிசி என்பது 10 கிலோவாக அதிகரிக்கப்படும் என கூறினார். இதுபற்றி மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பாஜக தலைமையிலான அரசு ஏழை மக்களுக்கு வழங்கும் இலவச ரேஷனை இரட்டிப்பாக்கி வழங்குவோம்.
அதன்படி இலவசமாக ரேஷனில் 10 கிலோ அரிசி வழங்குவோம். காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது தான் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி தனது போட்டோவை ரேஷன் பொருட்களுக்கான பெட்டிகளில் ஒட்டி வைத்து அனைத்து திட்டங்களையும் தானே வழங்குவதாக அடையாளப்படுத்தி கொள்கிறார். நான் ஏன் இந்த திட்டத்தை சொல்கிறேன் என்றால் நாங்கள் ஏற்கனவே தெலுங்கானா, கர்நாடகாவில் இதனை செயல்படுத்தி உள்ளோம்.
தற்போது 4 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலை வைத்து பார்த்தால் நரேந்திர மோடிக்கு மக்கள் வழியனுப்பு விழாவை நடத்திவிட்டனர் என்றே கூறுவேன். மேலும் ஜனவரி 4ம் தேதி மத்தியில் ‛இந்தியா' கூட்டணி ஆட்சியமைக்கும் என்று உறுதியாக நான் கூறுவேன்'' என்றார்.
இந்த வேளையில் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‛‛உத்தர பிரதேசத்தல் ‛இந்தியா' கூட்டணி 79 இடங்களில் வெல்லும். ஒரு இடத்தில் மட்டுமே பாஜக வெல்லும். ஏனென்றால் பொதுமக்கள் ‛இந்தியா' கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். வரும் நாட்களில் பாஜகவை வெறும் 140 தொகுதிகளில் மக்கள் முடக்குவார்கள்''என்றார்.
-
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம்












Click it and Unblock the Notifications