"கொரோனாவால் கங்கையில்.. சடலங்கள் மிதந்த போது எங்கு இருந்தீர்கள் யோகி.." விளாசும் மம்தா

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்க சில நாட்களே உள்ள நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக மம்தா பானர்ஜி வாக்கு சேகரித்தார்.

உத்தரப் பிரதேசத்தில் வரும் பிப். 10ஆம் தேதி தொடங்கி மொத்தம் 7 கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு மொத்தம் உள்ள 403 இடங்களில் ஆட்சி அமைக்க 202 இடங்களில் வெல்ல வேண்டும்.

இங்கு இப்போது பாஜகவுக்கும் சமாஜ்வாடி கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது..

மம்தா

மம்தா


இந்நிலையில், சமாஜ்வாடி கட்சிக்கு ஆதரவாக மே. வங்க முதல்வர் மம்தா பானர்ஜி களமிறங்கியுள்ளார். இது தொடர்பாக இன்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் கூட்டாகச் செய்தியாளரை சந்தித்த மம்தா, "சமாஜ்வாடி கட்சிக்கு மக்கள் ஆதரவு வேண்டும். பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும். பாஜக அளிக்கும் பொய்யான வாக்குறுதிகளில் மயங்கிவிடாதீர்கள்.

 கேள்வி

கேள்வி

பிரதமர் நரேந்திர மோடியின் நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு விரைவில் செல்ல உள்ளேன். உ.பி.யில் கொரோனா பொருந்தொற்றால் பொதுமக்கள் உயிரிழந்த போது யோகி ஆத்தியநாத் நீங்கள் எங்கே இருந்தீர்கள்? உயிரிழந்தோரின் உடல்களைக் கங்கையில் வீசிய குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். நீங்கள் பொதுமக்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

 அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

அதைத் தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ், "பாஜக தனது முழு பலத்தையும் மேற்கு வங்கத்தில் இறக்கியது. ஆனாலும், பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸைத் தோற்கடிக்க முடியவில்லை. இந்த முறை பாஜகவின் பொய் விமானம் உ.பி.யில் தரையிறங்க முடியாது. அனைத்து தரப்பு மக்களுக்காகவும் உழைக்கும் ஒரு அரசாக சமாஜ்வாடி இருக்கும்" என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 இணைந்து வெல்வோம்

இணைந்து வெல்வோம்

முன்னதாக அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வங்காளத்தில் நாம் ஒன்றாக இணைந்து அவர்களைத் தோற்கடித்தோம், இப்போது நாம் உ.பி.யில் தோற்கடிப்போம். இது தீதிக்கு நாங்கள் அளிக்கும் ஒரு வாக்குறுதி, நாங்கள் இந்தத் தேர்தலில் நிச்சயம் வெல்வோம்" என்று பதிவிட்டுள்ளார். மேற்கு வங்கத்தைத் தாண்டி மம்தா பானர்ஜி தனது கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், அகிலேஷுக்கு மம்தா அளித்துள்ள ஆதரவு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+