மோட்டார் பைக் இல்லையா... முதலிரவு முடிந்த உடன் தலாக் சொன்ன கணவன்- மனைவி அதிர்ச்சி
வரதட்சணையாக மோட்டார் பைக் வாங்கித்தரவில்லை என்ற கோபத்தில் முதலிரவு முடிந்த கையோடு மும்முறை தலாக் சொல்லி விவாகரத்து கொடுத்திருக்கிறான் ஒரு கணவன். உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
லக்னோ: வரதட்சணையா மாப்பிள்ளை சொம்பு கேட்கறார் என்று சொல்லி வடிவேலுவிற்கு நடக்க இருந்த நிறுத்துவார் திருமண தரகர். அது நகைச்சுவைக்காக வைக்கப்பட்ட காட்சியாக இருந்தாலும் உத்தரபிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து 24 மணிநேரத்தில் முதலிரவு முடிந்த கையோடு திருமணத்தை ரத்து செய்யும் வகையில் மும்முறை தலாக் கூறியுள்ளார் ஒரு கணவர். தனக்கு வரதட்சணையாகக் கேட்ட மோட்டார் பைக்கை வாங்கித்தரவில்லை என்பதற்காகவே தலாக் கொடுத்தது தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் பெயர் ருக்சானா பனோ என்பதாகும். இவருக்கும் சஹாஹே அலாம் என்பவருக்கும் கடந்த 13ஆம் தேதி உத்தரபிரதேச மாநிலம் ஜஹாங்கீரபாத் பகுதியில் திருமணம் நடந்தது. சந்தோசமாக புகுந்த வீட்டிற்குப் போனார் ருக்சானா.

திருமண சடங்குகள் எல்லாமே சந்தோசமாக முடிந்து சாந்தி முகூர்த்தமும் நடந்து முடிந்தது. பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டிற்கு சீர் கொண்டு வந்தனர். பெட்டி பெட்டியாக பாத்திரங்கள், வீட்டிற்குத் தேவையான பொருட்கள் என அனைத்தும் கொண்டு வந்து இறக்கினர். ஆனால் மாப்பிள்ளை எதிர்பார்த்த மோட்டார் பைக் மட்டும் கொண்டு வரவில்லை. அதைப்பார்த்த புது மாப்பிள்ளை அலாமிற்கு ஆத்திரம் வந்தது.
மனைவியை கூப்பிட்டு மூன்று முறை தலாக் சொன்னார் இதனால் புதுப்பெண் ருக்சானாவும் அவரது குடும்பத்தினரும் அதிர்ச்சியடைந்தனர். திருமணம் முடிந்து 24 மணி நேரத்திற்குள் தலாக் சொல்லி விவாகரத்து செய்தது பற்றி போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் 12 பேர் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த உலகத்தில் எத்தனையோ விசித்திரமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன, ஆனால் வரதட்சணையாக மோட்டார் சைக்கில் வாங்கித்தரவில்லை என்று கூறி 24 மணிநேரத்தில் விவாகரத்து நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications