தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
லக்னோ: தனது தங்கையின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கி கொடுத்த கணவனை, தனது குடும்பத்தினருடன் இணைந்து மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடைய மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணன்கள் மற்றும் தம்பிகள் தங்களது தங்கை அல்லது அக்காக்களுக்கு சீர் செய்வது என்பது இந்தியா முழுவதும் உள்ள வழக்கமாக உள்ளது. தங்களால் முடிந்த தங்க நகைகள் மற்றும் பரிசு பொருட்களை வாங்கித் தருவார்கள்.. திருமணம் ஆகாத வரை இதில் பிரச்சனை ஏற்படுவது இல்லை.. ஆனால் அண்ணன் மற்றும் தம்பிகளுக்கு ஒரு காலக்கட்டத்தில் திருமணம் நடந்துவிட்டால், எல்லாம் முடிந்துவிடும்.

அதன்பிறகு தங்கைகளுக்கோ, அக்காக்களுக்கோ செய்ய ஆசைப்படும் சகோதரர்கள் மனைவிக்கு தெரியாமல் தான் செய்ய வேண்டியதிருக்கும். அப்படி மனைவிக்கு தெரிந்து செய்தால் அவ்வளவு தான். மனைவிகள் பல வீடுகளில் கொடூரமாக மாறிவிடுகிறார்கள். இது எல்லா பக்கமும் நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இந்த விவகாரத்திற்காக கணவனை அடித்துக் கொன்றுள்ளார் மனைவி.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
உத்தரபிரதேச மாநிலம் ஃபதேபூர் மாவட்டம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தில் வசித்து வந்தவர் 35 வயதாகும் சந்திர பிரகாஷ் மிஸ்ரா.இவருக்கு திருமணமாகி க்ஷமா மிஸ்ரா என்ற மனைவி உள்ளார்.
சந்திர பிரகாஷ்மிஸ்ராவின் தங்கைக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சந்திர பிரகாஷ் மிஸ்ரா தன்னுடைய தங்கையின் திருமணத்திற்கு தங்க மோதிரம் மற்றும் டி.வி., ஒன்றை பரிசாக வாங்கி கொடுக்க முடிவு செய்திருக்கிறார். அண்ணன்கள் பொதுவாக தனது தங்கைக்கு திருமணத்தின் போது சீர் செய்வார்கள் என்பதால், அதன்படி தனது தங்கைக்கு விரும்பிய பொருளை வாங்கிதர ஆசைப்பட்டுள்ளார். இதனை அறிந்த அவரது மனைவி க்ஷமா மிஸ்ரா கடும் கோபமடைந்தார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.
இதனால் கோபமடைந்த க்ஷமா மிஸ்ரா தனது கணவரின் செயலை தட்டிக்கேட்க விரும்பினார். இதற்காக தனது சகோதரர்கள் மற்றும் உறவினர்களை அழைத்துள்ளார். அவர்களும் நேரில் வந்துள்ளார். அப்போது சந்திர பிரகாஷ், தான் விரும்பியபடி, தனது தங்கைக்கு தங்க மோதிரம் மற்றும் டிவி வாங்கி கொடுப்பேன் என்று விடாப்பிடியாக இருந்துள்ளார். இதனால் பேச்சுவார்த்தை முற்றி ஒரு கட்டத்தில் கைகலப்பானது.
க்ஷமா மிஸ்ரா தனது கணவர் என்றும் பாராமல், தனது அண்ணன்களுடன் சேர்ந்து கணவர் சந்திர பிரகாஷ் மிஸ்ராவை கடுமையாக தாக்க தொடங்கினார். சந்திர பிரகாஷை சுமார் 1 மணிநேரமாக தாக்கியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்திர பிரகாஷ் மிஸ்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இச்சம்பவம் தொடர்பாக சந்திர பிரகாஷின் மனைவி க்ஷமா மிஸ்ரா உள்பட 5 பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி ஃபதேபூர் சர்கிள் இன்ஸ்பெக்டர் பினு சிங் கூறுகையில், வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்ட தனது சகோதரிக்கு எல்இடி டிவி மற்றும் தங்க மோதிரத்தை திருமண பரிசாக வழங்க சந்திரா விரும்புவதாக மனைவியிடம் கூறினார். ஆனால், அவரது மனைவி க்ஷாமா அதை எதிர்த்தார்.
இந்த விஷயத்தில் க்ஷாமாவின் உறவினர்கள் தலையிட்ட போது, கடுமையான சண்டை ஏற்பட்டது. அவர்கள் சந்திர பிரகாஷை தடிகளால் தாக்கி பலத்த காயப்படுத்தி உள்ளனர், தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சந்திராவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.
-
இந்தியாவில் வீடுகளில் தேங்கி கிடக்கும் 32,000 டன் தங்கம்.. மறுசுழற்சி செய்ய விரும்பும் மோடி! ஏன்? -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆட்டம் போடும் அமெரிக்க டாலர்.. கோடிக்கணக்கான ரூபாய் தங்கத்தை விற்ற ரிசர்வ் வங்கி! இது தான் காரணமா? -
சேலத்தில் விசிக பிரமுகருக்கு 20 பவுன் தங்க மாலை.. மனைவியான பெண் போலீஸ் ஏட்டு சர்ப்ரைஸ் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications