வலதுசாரிகள் என்றாலும்.. எங்களின் பல சிந்தனைகள் இடதுசாரி எண்ணங்களே.. ஆர்எஸ்எஸ் பொது செயலாளர் அதிரடி
மனிதநேயத்தின் சாரமே ஹிந்துத்வா சிந்தனையாக இருக்கிறது என்று தத்தாத்ரேயா ஹோசபலே கூறுகிறார்
லக்னோ: 'ஹிந்துத்வா கொள்கையானது, இடதும் கிடையாது, வலதும் கிடையாது.. ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் சாரமே ஹிந்துத்வா சிந்தனையாக இருக்கிறது" என்று தத்தாத்ரேயா ஹோசபலே கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவரும், பொதுச்செயலாளருமான தத்தாத்ரேயா ஹோசபலே அடிக்கடி கட்சி ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் கருத்து தெரிவிப்பது வழக்கம்.
ஆனால் இவர் எது பேசினாலும் அப்படியே சர்ச்சையாக வெடித்துவிடும்.. இப்படித்தான் கடந்த பிப்ரவரி மாதம் லக்னோவில் ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் சுனில் அம்பேத்கர் எழுதிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தேசியவாதி
அப்போது அவர் பேசும்போது, ''இந்து என்றால் தேசியவாதி என்று அர்த்தம்... இந்தியாவில் ஒரு மரபணு மட்டும்தான் இருக்கிறது. அந்த மரபணு பெயர் இந்து.. இந்துத்துவாவுக்கு ஓர் அடையாளம் இருக்கிறது.. மாறுபட்ட சிந்தனையுடன் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் வகுப்புவாதத்தை பரப்புகிறார்கள். .. ஆர்எஸ்எஸ் அமைப்பு என்ன சொன்னாலும் இந்துத்துவா புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

பாரம்பரியம்
100 வருஷத்துக்கு முன்பு, இந்து என்ற வார்த்தை பரந்த அளவில் திரித்து கூறப்பட்டுள்ளது... இந்த நாட்டின் நீண்டகால பாரம்பரியத்தை புரிந்துகொள்ளாதவர்கள், இதை வகுப்புவாதமாக்குகிறார்கள்... சிலர் நாங்கள் இந்துக்கள் கிடையாது, இந்தியர்கள் என்கிறார்கள்... மேலும் சிலர், அரசியல் காரணங்களுக்காக அந்த வார்த்தையை சொல்லவே புறக்கணிக்கிறார்கள்... அது அவர்களின் பார்வை.. ஆனால், பெயர் ரொம்ப முக்கியமானது... நீங்கள் மடோனாவின் போட்டோவுக்கு எந்த பெயரையும் வைத்துவிட முடியாது" என்றார்.

ஆர்எஸ்எஸ்
அந்த விழாவில் இவர் பேசிய இந்த பேச்சு இன்றுவரை விவாதத்திற்கு உள்ளாகி வருகிறது. இப்போது இன்னொரு விழாவில் இதுபோலவே ஒரு கருத்தை கூறியுள்ளார்.. ஆர்எஸ்எஸ் தலைவர் ராம் மாதவ் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில், தத்தாத்ரேயா ஹொசபெலே கலந்து கொண்டார்.. விழாவில் பேசும்போது, இடதுசாரி சிந்தனைகள் நோக்கி நகர இந்த உலகம் நிர்பந்திக்கப்பட்டது... இப்போது வலதுசாரி சிந்தனைகள் நோக்கி நகர ஆரம்பித்துள்ளது.. இப்போது மத்தியில் இருக்கிறது...

நடுநிலை
ஹிந்துத்வா கொள்கையும் அதுதான். இடதும் கிடையாது, வலதும் கிடையாது.. ஒருங்கிணைந்த மனிதநேயத்தின் சாரமே ஹிந்துத்வா சிந்தனையாக இருக்கிறது.. நாங்கள் வலதுசாரிகள் என்று ஆர்எஸ்எஸ் பயிற்சி கூட்டத்தில் எப்போதுமே சொன்னது இல்லை.. எங்களது பல சிந்தனைகள் இடதுசாரி சிந்தனைகளை ஒத்து காணப்படும்" என்றார்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications