Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'இவர்களுடன் மட்டுமே கூட்டணி..' உபி தேர்தலுக்கு பகுஜன் சமாஜ் தலைவர்..மாயாவதி போட்டுள்ள சூப்பர் பிளான்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: அடுத்தாண்டு உத்தரப் பிரதேசத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் யாருடனும் கூட்டணி வைக்காமல் தனித்துக் களமிறங்க உள்ளதாகப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளன.

 உபி தேர்தல்

உபி தேர்தல்

கொரோனா 2ஆம் அலைக்கு முன்பு வரை அங்கு பாஜக மிகப் பெரிய பலத்துடன் இருந்தது. இருப்பினும், கொரோனா 2ஆம் அலையை மோசமாகக் கையாண்டதில் அக்கட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் செல்வாக்கு குறைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், இதை 2024 மக்களவை தேர்தலின் முன்னோட்டம் என்று கூட சில அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

 கூட்டணி இல்லை

கூட்டணி இல்லை

மக்களவை தேர்தலில் அதிக எம்பிகளை கொண்ட மாநிலம் என்பதால் 2024 தேர்தலை ஆளும்கட்சியாக எதிர்கொள்ளவே அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன. இந்நிலையில், அடுத்தாண்டு நடைபெறும் தேர்தலில் தனித்துக் களமிறங்க உள்ளதாகப் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார். கடந்த 2007ஆம் ஆண்டில் பெற்றதைப் போலவே உபியில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

 மக்களுடன் கூட்டணி

மக்களுடன் கூட்டணி

இது குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்கப் போவதில்லை. நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம். சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்துத் தேர்தலைச் சந்திப்போம். மக்களுடன் நாங்கள் அமைக்கும் கூட்டணியே நிரந்தரமானது. சமாஜ்வாடி கட்சியும் (எஸ்பி) பாஜகவும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் தான். இருவரும் தேர்தலுக்காக இந்து-முஸ்லிம் அரசியலைக் கையில் எடுக்கிறார்கள்.

 தனிப்பெரும்பான்மை பெறுவோம்

தனிப்பெரும்பான்மை பெறுவோம்

2007-ல் கிடைத்ததைப் போல அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவோம் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். காங்கிரஸ் கட்சி கூறும் வாக்குறுதிகளை மக்கள் நம்பமாட்டார்கள். காங்கிரஸ் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளில் 50 சதவிகிதத்தை நிறைவேற்றி இருந்தால் கூட, மத்தியிலும் பல மாநிலங்களிலும் அவர்கள் ஆட்சி முடிவுக்கு வந்திருக்காது" என்று கடுமையாக விமர்சித்தார்.

 உபி தேர்தல்கள்

உபி தேர்தல்கள்

கடந்த 2007ஆம் ஆண்டு உபி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 206 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. அடுத்து 2012இல் நடைபெற்ற தேர்தலில் 224 தொகுதிகளில் வென்று சாமஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் முதல்வரானார். இருப்பினும், 2017 தேர்தல் முடிவுகள் தான் அனைவருக்கும் அதிர்ச்சி தந்தது. அப்போது தான் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் 312 தொகுதிகளில் வென்று பாஜக அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடித்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+