கையில் மைக்.. இடுப்பில் துப்பாக்கி! "நாங்கள் பிரபலமாகணும்.." அத்திக் அகமதை கொன்ற கொலையாளிகள் பகீர்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தையே அலறவிட்ட தாதா அத்திக் அகமது கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஒரு காலத்தில் உத்தரப் பிரதேசத்தையே அலறவிட்ட ரவுடி அத்திக் அகமது.. இவர் மீது உத்தரப் பிரதேசத்தில் ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதன் பின்னர் அரசியலிலும் நுழைந்து ஒரு ரவுண்ட் வந்தவர்.
ஏற்கனவே, மற்றொரு வழக்கில் அத்திக் அகமது கைதாகி சிறையில் இருந்து வந்தார். நேற்றைய தினம் அத்திக் அகமதையும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமதையும் போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வந்தனர்.

கொடூர கொலை: பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே அவரை செய்தியாளர்கள் சூழ்ந்து பல்வேறு கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போது செய்தியாளர் கூட்டத்தில் இருந்து வந்த கை ஒன்று மைக்கிற்கு பதிலாகத் துப்பாக்கியை நீட்டி சரமாரியாகச் சுடத் தொடங்கியது. இதில் அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். போலீசார் கட்டுப்பாட்டில் இருந்த ரவடி, அனைத்து ஊடகத்திற்கு முன் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதனிடையே இந்த கொலை குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது அத்திக் அகமதை கொன்ற அந்த மூன்று பேரும் போலி ஐடி கார்டு மற்றும் கேமராவுடன் பத்திரிகையாளர்கள் போல தங்களைக் காட்டிக் கொண்டு, நாள் முழுக்க அகமதை பின் தொடர்ந்து உள்ளனர்.
பிரபலம் ஆகக் கொலை: இந்த கொலை சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டவர்கள் லவ்லேஷ் திவாரி, சன்னி மற்றும் அருண் மவுரியா என அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்திக் அகமதை கொன்று அண்டர் வோல்டில் ஃபேபஸ் ஆக வேண்டும் என்றே இப்படிச் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காகக் கடந்த வியாழக்கிழமை பிரயாக்ராஜ் வந்து அவர்கள் ஒரு லாட்ஜில் ரூம் போட்டுத் தங்கியுள்ளனர், அந்த லாட்ஜின் மேலாளரிடமும் போலீசார் இப்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
பக்கா பிளான்: போலீஸ் காவலில் இருந்த அத்திக் அகமதும் அவரது சகோதரரும் மருத்துவப் பரிசோதனைக்காக அழைத்து வரப்படுவதை அறிந்த அவர்கள், அங்கு வைத்து அவர்களைக் கொல்ல திட்டமிட்டதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர். மேலும், அத்திக் அமகதை கொலை செய்ய அவருக்கு மிக அருகே செல்ல வேண்டும் என்றும் இதற்குப் பத்திரிக்கையாளர்களாகக் காட்டிக்கொள்வது ஒரே வழி என்றும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இதனால் போலி ஐடி கார்டுகளை ரெடி செய்த அவர்கள், அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரரை நாள் முழுக்க பாலோ செய்துள்ளனர். இந்தச் சூழலில் தான் பிரயாக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு வெளியே இரவு 10 மணியளவில், அத்திக்கை போலீசாரை அழைத்துச் செல்லும் போது மூன்று பேரும் இணைந்து கொடூரமாகக் கொலை செய்துள்ளனர்.

முதல் துப்பாக்கிக் குண்டு: அருண் மௌரியா என்பவர் தான் முதலில் நெருக்கமான தூரத்தில் இருந்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். முதல் குண்டே அத்திக்கின் தலையில் பாய்ந்துள்ளது. மூன்று பேரும் சேர்ந்து மொத்தம் 20க்கும் மேற்பட்ட முறை சுட்டுள்ளனர். அங்கே இருந்த போலீசார் துப்பாக்கிச் சூடு எதையும் நடத்தவில்லை. கொலையாளிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அத்திக் மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், "கொலையாளிகளிடம் இருந்து 3 போலி ஐடி கார்டுக், மைக் மற்றும் கேமராக்களை மீட்டுள்ளோம். கொலை செய்த பிறகு அவர்களே சரணடைந்துவிட்டார்கள். கொலையாளிகளில் ஒருவரான லவ்லேஷின் காலில் தோட்டா தாக்கியதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்" என்றார்.
அத்திக் அகமது: உத்தரப்பிரதேசத்தில் உள்ள புல்பூர் தொகுதியின் முன்னாள் எம்பியாக இருந்தவர் தான் இந்த அத்திக் அகமது. இவர் மீது கொலை, கடத்தல், மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 90க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் உள்ளன. 2018ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியரைத் தாக்கியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. கடந்த 2019இல் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது சகோதரர் அஷ்ரப்பும் ஒரு ரவுடி தான். அவர் மீதும் பல வழக்குகள் உள்ளன. கொலை வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச போலீசார் வெள்ளிக்கிழமை தான் அவரை கைது செய்திருந்தனர். முன்னதாக கடந்த புதன்கிழமை ஜான்சி மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் அவர்களின் மகன் ஆசாத் அகமது கொல்லப்பட்ட சில நாட்களில் அத்திக் அகமதும் கொல்லப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
வங்கியில் நடக்கும் "சில" விஷயங்கள்.! HDFC வங்கி தலைவர் திடீர் ராஜினாமா! லெட்டரில் சொன்ன பரபர மேட்டர் -
சீனா வேண்டாம்.. நடுக்கடலில் இந்தியாவை நோக்கி திரும்பிய 7 ரஷ்யா ஆயில் கப்பல்கள்! என்ன நடந்தது? -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
கேஸ் சிலிண்டர் பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு? திடீரென பறந்த லெட்டர்.. மத்திய அரசு முக்கிய பாயிண்டு -
இந்திய கப்பல்களுக்கு மட்டும் வழிவிடும் ஈரான்.. தமிழகத்திற்கு கிடைத்த மெகா நல்ல செய்தி.. சூப்பர்ல -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு












Click it and Unblock the Notifications