வாரணாசியில் மோடி "பரிதாப வெற்றி.." இதுவரை இப்படி நடந்ததே இல்லை!
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வெற்றி பெற்றிருக்கிறார். இது இவருடைய ஹாட்ரிக் வெற்றியாகும். இருப்பினும் கடந்த 3 தேர்தல்களில் வாங்கிய ஓட்டுகளில், மிகவும் குறைவாக ஓட்டுகள் பெற்றது இந்த தேர்தலில்தான்.
கடந்த 2019ம் ஆண்டை போல இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றிருக்கிறது. முதற்கட்டமாக 22 மாநிலங்களில் ஏப்ரல் 19ம் தேதியும், 88 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ம் தேதியும், 94 தொகுதிகளுக்கு மூன்றாம் கட்டமாக மே 7ம் தேதியும், 96 தொகுதிகளுக்கு 4ம் கட்டமாக மே 13ம் தேதியும், 5ம் கட்டமாக 49 தொகுதிகளுக்கு மே 20ம் தேதியும் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது.

7 மாநிலங்களில், 58 தொகுதிகளில் மே 25ம் தேதி 6ம் கட்டமாகவும், ஜூன் 1ம் தேதி 7 மாநிலங்களில் 57 தொகுதிகளுக்கு 7வது மற்றும் இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது.
இந்த முறை மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் நாற்காலியில் அமர்வாரா? அல்லது இந்தியா கூட்டணி வலுவான போட்டி கொடுத்து ஆட்சியை கைப்பற்றுமா? என்கிற எதிர்பார்ப்புகள் தீவிரமடைந்திருந்தன. குறிப்பாக மோடிக்கு இந்த தேர்தல் மிக முக்கியமானதாக இருந்தது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமரானால், நேருவுக்கு பிறகு தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் என்கிற பெருமைக்கு மோடி சொந்தக்காரராவார். எனவே தனிப்பட்ட முறையில் இந்த தேர்தல் மோடிக்கு மிக முக்கியமானதாக இருந்தது.
தவிர 2025ம் ஆண்டு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ்-ன் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதற்காக பாஜக ஆட்சிப்பொறுப்பில் இருக்க வேண்டியது முக்கியம். எனவே இந்த தேர்தலை பாஜக கவனமுடன் அனுகியது.
இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடக்கத்தில் முதல் இரண்டு சுற்றுகளில் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் முன்னணியில் இருந்தார். இது ஊடகங்களில் பெரும் விவாதங்களை கிளப்பியது. ஆனால் அடுத்தடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கையில் பிரதமர் மோடி முன்னிலைக்கு வந்தார்.
இறுதியாக 1,52,513 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார். இருப்பினும் முந்தைய தேர்தலை விட தற்போது வாங்கிய வாக்குகள் 9.38 சதவிகிதம் குறைவு. அதேநேரம் காங்கிரஸின் வாக்கு சதவிகிதம் 26.36 உயர்ந்து, 40.74 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு இதே காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயை விட 4,79,505 வாக்குகளை மோடி பெற்றிருந்தார். மொத்த வாக்கு சதவிகிதம் 63.62 ஆக இருந்தது.
இதே 2014ம் ஆண்டு, மோடிக்கு எதிராக அஜய் ராய் மட்டுமல்லாது அரவிந்த் கெஜ்ரிவாலும் களமிறங்கியிருந்தார். இதில் 5,81,022 வாக்குகள் பெற்று மோடி வெற்றி பெற்றார். இரண்டாவது இடம் பிடித்த கெஜ்ரிவால் 2,09,238 வாக்குகளை பெற்றிருந்தார். இருவருக்கும் இடையில் வாக்கு வித்தியாசம் 3,71,784ஆக இருந்தது. காங்கிரசின் அஜய் ராய் 75,614 வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாம் இடம் பிடித்திருந்தார்.
இப்படியாக கடந்த 3 தேர்தல்களை ஒப்பிடும் போது மோடி, இந்த தேர்தலில்தான் மிக குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications