Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் காந்தக் கண்ணழகி.. கும்பமேளா கண்டறிந்த மோனலிசா! ஜொல்லும் நெட்டிசன்கள்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரபிரதேச மாநிலம் ப்ராயக்ராஜில் மகா கும்பமேளா 2025 வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், லட்சக்கணக்கானோர் அங்கு திரண்டுள்ளனர். இந்நிலையில் அந்த திருவிழாவில் ருத்ராட்ச மாலைகள் விற்று வரும் இளம்பெண் ஒருவர் திடீரென சமூக வலைதளங்களில் பிரபலமாகியுள்ளார். மகா கும்பமேளாவின் மோனலிசா என அழைக்கப்படும் அவரைத் தேடி தினமும் ஆயிரக்கணக்கானோர் வருவதாகக் கூறுகின்றனர் உறவினர்கள்.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

maha kumbh mela 2025 monalisa lucknow 2025


அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை வரை நடைபெறது.

இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இளம் பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

தற்போது அவரது புகைப் படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த அவர் கும்பமேளாவின் மோனலிசா என அழைக்கப்படுகிறார். மேலும் அவரது பெயர் மோனலிசா பொக்லே என கூறப்படுகிறது. குடும்ப வறுமை காரணமாக சிறு வயதிலேயே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு ருத்ராட்ச மாலை விற்கும் தொழிலில் அவர் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

தற்போது மகா கும்ப மேளாவுக்காக ஏராளமானோர் அங்கு திரண்டு இருக்கும் நிலையில் ஒரு நாளைக்கு ஆயிரம் முதல் 3000 ரூபாய் வரையிலான ருத்ராட்ச மாலைகளை தான் விற்பனை செய்து வருவதாகவும், தன்னிடம் இருக்கும் அனைத்து மாலைகளையும் விற்றால் ஒன்றரை லட்சம் வரை வருமானம் கிடைக்கும் என அவர் கூறுகிறார்.


ஆனால் அவரை மாடலிங் துறைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என கூறி வருகின்றனர் நெட்டிசன்கள். தற்போது அனைத்து சமூக வலைதளங்களில் ப்ரவுன் ப்யூட்டி என அவர் பிரபலமாக இருக்கும் நிலையில் ஏராளமான யூட்யூப் சேனல்கள், செய்தி நிறுவனங்கள் அவரிடம் பேட்டி எடுத்து வருகிறார்.

மேலும் அவரைப் பார்ப்பதற்காகவே தினமும் ஆயிரக்கணக்கானோர் அவரை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவரது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக கூறும் அவர்களது குடும்பத்தினர் தற்போது மகா கும்ப மேளாவுக்கு முன்னதாகவே ஊரை விட்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

இவர் மட்டுமல்லாது உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த மாடலிங்கில் இருந்து பெண் துறவியாக மாறிய ஹர்ஷா, இந்துூரைச் சேர்ந்த மற்றொரு ருத்ராட்ச மாலை விற்கும் பெண், ஐஐடி பாபா என பலரும் கும்பமேளா மூலம் ஊடக வெளிச்சம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+