முஸ்லீம் ஃபக்கீர்களை சாலையில் நிற்க வைத்து.. ச்சீ.. என்ன கொடூரம் இது.. உ.பியில் நடந்த பரபர சம்பவம்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் பக்கீர்கள் மோசமாக அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நுபுர் சர்மா, சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகத்திற்கு எதிராக கடுமையாக பேசி இருந்தார். தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் நபிகளை கடுமையாக இகழ்ந்து சில கருத்துக்களை நுபுர் சர்மா வைத்து இருந்தார்.
இவரின் கருத்துக்கு எதிராக சர்வதேச அளவில் விமர்சனங்கள் வைக்கப்பட்டன. கத்தார் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவிடம் விளக்கமும் கேட்டன. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

சர்வதேச விமர்சனம்
இந்த விவகாரம் சர்வதேச அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. இந்தியாவிற்கு சர்வதேச அளவில் இந்த விவகாரம் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில்தான் சர்ச்சைகளுக்கு இடையில், உத்தர பிரதேசத்தில் முஸ்லீம் பக்கீர்கள் மோசமாக அவமதிக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இஸ்லாமியர் பக்கீர்கள் என்பவர்கள், அம்மார்க்கத்தை தீவிரமாக பின்பற்றும், அமைதியை விரும்பும், துறவிகள் போன்றவர்கள் ஆவர்.

இஸ்லாம் முக்கியம்
தங்கள் வாழ்க்கையை இஸ்லாத்திற்கு அர்ப்பணித்தவர்கள். இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் கோன்டா என்ற பகுதியில் உள்ள டெகூர் கிராமத்தில், முஸ்லீம் பக்கீர்கள் மோசமாக அவமதிக்கப்பட்டு உள்ளனர். அந்த கிராமம் வழியாக பயணம் செய்த பக்கீர்களை தடுத்து நிறுத்திய இந்துத்துவா இளைஞர்கள் சிலர்.. ஏன் இங்க வரீங்க. யார் நீங்க என்று கேட்டு அந்த இஸ்லாமிய பக்கீர்களை துன்புறுத்தி உள்ளனர்.

தாக்குதல்
உங்களுடைய ஆதார் கார்டுகளை கொடுங்கள் என்று முதலில் கேட்டு பக்கீர்களை தொல்லை செய்துள்ளனர். அதற்கு அவர்கள்.. நாங்க துறவிங்க.. எங்ககிட்ட அதெல்லாம் இல்லை என்று சொன்னதும்... இந்துத்துவா இளைஞர்கள் அவர்களை சுற்றி நின்று.. தீவிரவாதிகள்., தீவிரவாதிகள்.. ஜிஹாதிகள் என்று கோஷம் எழுப்பி உள்ளனர். தொடர்ந்து அவர்களை தொல்லை செய்த அந்த இளைஞர்கள்.. நீங்கள் யார் என்பதை நிரூபியுங்கள்.

நிரூபியுங்கள்
ஐடி கார்டு காட்டுங்கள். இல்லையென்றால்.. உங்களை தாக்குவோம் என்று கூறி மிரட்டி உள்ளனர். அதோடு கையில் இருந்த குச்சியால் அவர்களை லேசாக தாக்கி உள்ளனர். மேலும், அவர்களை தோப்புக்கரணம் போட வைத்து தொல்லை செய்துள்ளனர். இதில் சில இளைஞர்கள் காவி துண்டு அணிந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த முஸ்லீம் பக்கீர்கள் மிகவும் வயதானவர்களாக காணப்பட்டனர்.

மோசமான சம்பவம்
இந்த கொடுமையான சம்பவத்தை தடுக்க முயன்ற இன்னொரு இளைஞரையும் இந்துத்துவா கும்பல் தள்ளிவிட்டது. வயதான காலத்தில், கண்களில் பயத்தோடு முஸ்லீம் பக்கீர்கள் அங்கேயே தோப்புக்கரணம் போட்டனர். இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்தியாவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படுவதாக வளைகுடா நாடுகள் விமர்சனம் வைக்கும் நிலையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
-
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
மாமியாரை திருமணம் செய்ய மனைவியை விவாகரத்து செய்த கணவன்.. உ.பியில் விநோதம்.. காரணம் என்ன தெரியுமா -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
காங்கிரஸின் டபுள் கேம்.. வேலையை காட்டிய ராகுல் காந்தியின் டீம்! கேரளாவில் ஷாக் -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications