அயோத்தியில் பாஜக “ஷாக்”.. ராமர் கோயில் வார்டில் முஸ்லிம் சுயேட்சை வெற்றி! முழு ஆதரவளித்த இந்துக்கள்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலில், ராமர் கோயில் கட்டப்படும் பகுதிக்கு பின்னால் உள்ள இந்துக்கள் அதிகம் வசிக்கும் வார்டு ஒன்றில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்று இருக்கிறார்.
நேற்று கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வந்த அதே நேரம், உத்தரப்பிரதேச அயோத்தி மாநகராட்சிக்கு நடத்தப்பட்ட மேயர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

அயோத்தி ராமஜென்ம பூமி விவகாரத்தால் இங்கு பெரும்பான்மை வார்டுகளில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால், அக்கட்சியால் 60 இடங்களில் 27 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. சமாஜ்வாடி கட்சி 17 இடங்களிலும் சுயேட்சை வேட்பாளர்கள் 10 இடங்களிலும் வென்று இருக்கிறார்கள்.
இந்த தேர்தலில் பாஜக வெற்றிபெற்றாலும், எதிர்பார்த்த வெற்றி இது இல்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அயோத்தி மாநகராட்சி தேர்தலில் இந்துக்கள் அதிகம் நிறைந்த வார்டில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்று இருக்கிறார் சுல்தான் அன்சாரி என்ற இஸ்லாமிய இளைஞர்.
சுல்தான் அன்சாரி வெற்றிபெற்ற பகுதியின் பெயர் ராம் அபிராம் தாஸ். அயோத்தி ராம ஜென்ம பூமி கோயில் இயக்கதை நினைவூகூரும் வகையில் அப்பகுதிக்கு இந்த பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு தொகுதியில் பாஜக, சமாஜ்வாடி போன்ற பெரிய கட்சிகளை வீழ்த்தி அசத்தல் வெற்றிபெற்று இருக்கிறார் சுல்தான் அன்சாரி.
அயோத்தி ராமர் கோயில் கட்டப்படும் இடத்துக்கு பின்புறமாக அமைந்து இருக்கும் இந்த வார்டில் 440 இஸ்லாமியர்களும் 3,844 இந்துக்களும் உள்ளனர். அங்கு இஸ்லாமியர்களின் வாக்கு சதவீதம் வெறும் 11 தான். ஆனால், சுல்தான் அன்சாரி 42 சதவீத வாக்குகளை பெற்று வென்று இருக்கிறார். 10 வேட்பாளர்கள் போட்டியிட்ட அந்த வார்டில் 2,388 வாக்குகள் பதிவான நிலையில், 996 வாக்குகள் அன்சாரிக்கு விழுந்துள்ளன.
அன்சாரி வெற்றிபெற்ற அந்த வார்டில் பாஜக 3 வது இடத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. 2 வது இடத்தை நாகேந்திர மஞ்சி என்ற சுயேட்சை வேட்பாளர் பெற்று இருக்கிறார். இதுகுறித்து பேசிய சுல்தான் அன்சாரி, "அயோத்தியில் நிலவும் இந்து - முஸ்லிம் சகோதரத்துவத்துக்கும் அமைதிக்கும் இதுவே நல்ல எடுத்துக்காட்டு. எங்கள் இந்து சகோதரர்கள் எந்த பாகுபாடும் பார்க்கவில்லை. வேறு மதத்தை சேர்ந்தவனாக என்னை அவர்கல் நடத்தவில்லை.
அவர்கள் எனக்கு ஆதரவு அளித்து வெற்றியை தந்து உள்ளனர். நான் இந்த பகுதியை சேர்ந்தவன். என் அறிவுக்கு உட்பட்ட அனைத்து விசயங்களையும் செய்வேன். எனது மூதாதையர்கள் 200 ஆண்டுகளுக்கும் முன்பாக இப்பகுதியில் வசித்தார்கள். நான் தேர்தலில் போட்டியிடப்போவதாக எனது இந்து நண்பர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் முழு மனதுடன் என்னை ஆதரித்து ஊக்கம் கொடுத்தார்கள்." என்றார்.
இதுகுறித்து அந்த வார்டை சேர்ந்த அனுப் குமார் கூறுகையில், "வெளியில் இருந்து பார்க்கும் மக்கள், அயோத்தியில் எப்படி முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கின்றன. முஸ்லிம்கள் வாழ்வது மட்டுமில்லை, தேர்தலில் வெற்றியும் பெற முடியும் என்பதை அவர்கள் பார்க்கலாம்." என்றார்.
அயோத்தியை சேர்ந்த தொழிலதிபர் சௌரவ் சிங் கூறுகையில், "ராமர் கோயிலால் உலகளவில் அயோத்தி புகழ்பெற்றது. இந்த ஆன்மீக நகரம் இந்துக்களுக்கு எப்படி முக்கியமானதோ அதேபோல் இஸ்லாமியர்களுக்கும் முக்கியமானது. அங்கு ஏராளமான மசூதிகளையும், நூற்றாண்டுகள் பழமையான முஸ்லிம் சூஃபிக்களின் கல்லறைகளையும் பார்க்க முடியும்." என்றார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications