இதுக்கு ஒரு முடிவே இல்லையா? உ.பியில் காளைகளுக்கு பதில் பசுக்களை மட்டும் பிறக்க வைக்க யோகி திட்டம்
உத்தர பிரதேசத்தில் இனி காளை மாடுகளுக்கு பதில், பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு இருக்கிறார்.
லக்னோ: உத்தர பிரதேசத்தில் இனி காளை மாடுகளுக்கு பதில், பசு மாடுகள் மட்டுமே பிறக்கும் வகையில் மரபணு மாற்றம் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் திட்டமிட்டு இருக்கிறார்.
உத்தர பிரதேசத்தில் மனிதர்களை விட மாடுகளுக்குத்தான் அதிகமாக கவனமும், அரசு திட்டங்களும் கொண்டு வரப்படுகிறது. எங்க ஊர் மாட்டுக்காரன் -2 படம் கூட, உத்தர பிரதேச ஸ்டைலில் யோகியை வைத்து எடுக்க முடியும்.
அந்த அளவிற்கு இவர் மாடுகள் மீது எக்கச்சக்க லவ் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில்தான் உத்தர பிரதேசத்தில் காளை மாடுகளுக்கு பதில் முழுக்க முழுக்க பசு மாடுகள் மட்டும் பிறக்க வைக்கும் வகையில் திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

என்ன செய்வார்கள்
"பாலியல் ரீதியாகப் பிரிக்கப்பட்ட விந்தணுக்கள்" என்று திட்டத்திற்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி காளை மாடுகளின் விந்தணுக்களை எடுத்து, அதில் பசுக்களை பிறக்க வைக்க கூடிய சாத்தியமுள்ள விந்துக்களை மட்டும் பிரித்து பின் அதை பசு மாட்டிற்குள் செலுத்தி பசுக்கன்றுகளை பிறக்க வைப்பார்கள். டெஸ்ட் டியூப்பேபி போல இந்த கன்றுகள் பிறக்க வைக்கப்படும்.

என்ன இப்படி
இதன் மூலம் அம்மாநிலத்தில் பசு கன்றுகளின் எண்ணிக்கை அதிகம். ஆனால் காளைகளின் எண்ணிக்கை குறையும். இதனால், பசுக்கள் நிறைய பால் உற்பத்தி செய்யும். மக்கள் அதிக அளவில் பலன் அடைவார்கள் என்று யோகி ஆதித்யநாத் கருதுகிறார்.

ஏற்கனவே வெற்றி
இந்த திட்டம் முதற்கட்டமாக பெரிய அளவில் வெற்றி அடைந்து இருக்கிறது. மொத்தம் 581 பசுக்களுக்கு இப்படி விந்தணுக்களை செலுத்தி பார்த்து இருக்கிறார்கள். அதில் 521 பசுக்கள் சரியாக பசுக்கன்றுகளை ஈன்று இருக்கிறது. இதன் காரணமாக இந்த திட்டம் 90 சதவிகிதம் சிறப்பாக வேலை செய்கிறது என்று கூறியுள்ளனர்.

பரப்ப திட்டம்
உத்தர பிரதேசத்தில் பசுக்களை நம்பி மக்கள் அதிகம் இருக்கும் லட்சுமிபூர் கேரி, பாரபங்கி, இத்வா ஆகிய இடங்களில் இந்த சோதனை வெற்றி அடைந்து இருக்கிறது. விரைவில் மாநிலத்தின் பிறபகுதிகளுக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்ல உள்ளது, இதற்காக பல கோடி செலவு செய்ய அம்மாநில அரசு முடிவெடுத்து இருக்கிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications