நோ பார்க்கிங்கில் நின்ற அமைச்சரின் கார்.. எல்லாருக்கும் ரூல்ஸ் ஒன்று தான்! போலீசின் தரமான சம்பவம்
லக்னோ: பொதுமக்களாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் ஒரே ரூல்ஸ் தான் என சட்டசபை வளாகத்தில் ‛நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த அமைச்சரின் காரை போலீசார் ‛டோவிங்' செய்து இழுத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தர பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். இவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக சஞ்சய் நிசாத் செயல்பட்டு வருகிறார்.

சஞ்சய் நிசாத் மீன்வளத்துறை அமைச்சராக இருக்கிறார். இவர் நிசாத் கட்சியின் தலைவராக உள்ளார். இந்த கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் சஞ்சய் நிசாத்துக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் சட்டசபை சிறப்பு கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடந்தது. இந்த சிறப்பு கூட்டத்தொடர் மொத்தம் 4 நாட்கள் நடந்தது. 14ம் தேதி கடைசி நாள் கூட்டத்தொடரில் ஸ்ரீ பங்கே பிகாரி கோவில் அறகட்டளை மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சமயத்தில் அமைச்சர் சஞ்சய் நிசாத் சட்டசபை வளாகத்தில் விதிகளை மீறி தனது காரை நிறுத்தி இருந்தார்.
‛நோ பார்க்கிங்' ஏரியாவில் அவர் விதியை மீறி தனது வெள்ளை நிற டொயொட்டா ஃபார்ச்சுனர் காரை நிறுத்திவிட்டு சட்டசபைக்கு சென்றிருந்தார். இதனால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்த போலீசார் அமைச்சர் சஞ்சய் நிசாத்தின் கார் என்று பாராமல் ‛டோவிங்' செய்து அப்புறப்படுத்தினர்.
ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அவரது காரை இழுத்து சென்றனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.
ஏனென்றால் பல இடங்களில் கவுன்சிலர்கள் முதல் பலரும் தவறு செய்தாலும் கூட போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் தவிப்பார்கள். இங்கேயும் கூட அமைச்சருக்கு தகவல் சொல்லி அனுப்பி காரை வேறு இடத்தில் நிறுத்தும்படி போலீசார் கூறியிருக்கலாம். ஆனால் அதை போலீசார் செய்யாமல், சட்டசபை வளாகத்திலேயே அமைச்சரின் காரை ‛டோவிங்’ செய்து அப்புறப்படுத்தியதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications