Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சைவ' உணவு விற்றால் மட்டுமே.. கேஎஃப்சிக்கு அனுமதி! அயோத்தியில் மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் சமீபத்தில்தான் ராமர் கோயில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்நிலையில், இந்த கோயிலின் அருகில் கேஎப்ஃசி கடையை திறக்க வேண்டும் எனில், சைவ உணவுகளை மட்டுமே விற்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

ராமர் பிறந்ததாக நம்பப்படும் அயோத்தியில் அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி பால ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Notice to allow KFC only if selling vegetarian in Ayodhya

ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது. ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி, 'இது மிகவும் உணர்ச்சிகரமான தருணம்' என்று கூறியுள்ளார். கும்பாபிஷேகத்தை நேரலையில் கண்டுகளிக்க நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் கோயில்களில் எல்இடி திரை அமைக்கப்பட்டு நேரலை செய்யப்பட்டது.

பாஜக ஆளும் மாநிலங்களில் ஜனவரி 22ம் தேதி பொது விடுமுறையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வதாக செல்லப்படுகிறது. எனவே இவர்களுக்கான உணவு தேவையை பூர்த்தி செய்ய அதிக அளவில் ஹோட்டல்கள் முளைத்திருக்கின்றன. இந்நிலையில், கேஎஃப்சி(KFC) அயோத்தியில் அமைக்கப்படுமா? என்று கேள்வி எழுந்தது.

இதற்கு மாவட்ட நிர்வாகம் பதிலளித்திருக்கிறது. அயோத்தி நிர்வாகம், 'பஞ்ச் கோசி மார்க்' எனும் முறையை பின்பற்றி வருகிறது. அதாவது அயோத்தி ராமர் கோயிலை சுற்றியுள்ள 15 கி.மீ தொலைவில் அசைவம் விற்க கூடாது என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால் அயோத்தியின் மற்ற பகுதியில் இதற்கு எந்த தடையும் இல்லை. எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியர் நிதிஷ் குமார் கூறுகையில்,

"அயோத்தியில் மற்ற பகுதிகளில் மது மற்றும் இறைச்சி விற்பனைக்கு எந்த தடையும் இல்லை. KFC உட்பட அனைத்து பிராண்டுகளும் இங்கு விற்பனை நிலையங்களைத் திறக்க வரவேற்கப்படுகின்றன, ஆனால் இந்த நிறுவனங்கள் 'பஞ்ச் கோசி மார்க்' பகுதிக்குள் கிளையை திறந்தால், வெறும் சைவம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.

அயோத்தி மட்டுமல்லாது ஹரிதுவாரிலும் அதன் நகர எல்லைக்குள் இதுபோன்று அசைவ உணவு விற்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+