படிப்பு முக்கியம்.. பெண்களின் கல்விக்கும் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம்! அசத்தும் உ.பி அரசு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நாடு முழுவதும் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டதை அம்மாநில அரசு கொண்டாடி வருகிறது. தற்போது வரை மாநிலத்தில் உள்ள 50 சதவிகிதத்திற்கும் அதிகமான கிராமங்களில் வசிக்கும் 7 கோடி சாமானிய மக்களுக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது. இத 77வது சுதந்திர தினத்தின் சாதனையாக பார்க்கப்படுவதாக துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது, "யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்திருக்கிறது.

Officials are proud that the Uttar Pradesh government has ensured education and security for girls

உத்தரப் பிரதேசம் கடந்த காலங்களில் கடுமையான வானிலைகளை எதிர்கொண்டு வந்திருக்கிறது. ஒரு பக்கம் தீவிரமான மழை பெய்தாலும், மறுபுறம் தீவிரமான வறட்சி அனைவரையும் தண்ணீர் நோக்கி அலைய வைத்தது. குறிப்பாக பெண்கள் குடிநீருக்காக பல கி.மீ வரை நடந்தே சென்ற அவலமும் நீடித்தது. இதனை போக்க மாநில அரசு சில திட்டங்களை தீட்டியது. அதன்படி வீடுகள் தோறும் குழாய்கள் அமைக்கப்பட்டன. இன்று இந்த குழாய்களில் சுத்தமான குடிநீர் கிடைக்கிறது.

எனவே பெண்கள் தண்ணீருக்காக நீண்ட தூரத்திற்கு நடக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல பெண் கல்விக்கு மாநில அரசு ஏராளமான முக்கியத்துவத்தை கொடுத்து வருகிறது. முதல் தலைமுறையை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் இலவசமாக புத்தகங்கள், சீருடை போன்றவையும் வழங்கப்பட்டுள்ளன. எனவே பெண்கள் பள்ளிகளை நோக்கி அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். இதில் சிறப்பாக பயிலும் மாணவிகளுக்கு உயர் கல்வி பயிலவும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

இது தவிர பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார். இத்திட்டத்தின்படி 12 துறைகள் இந்த திட்டத்தை செயல்படுத்தும். தற்போது இதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் 3 மாதங்களில் முடிவடையும். முதல் கட்டத்தில் 17 மாநகராட்சிகளுடன் கௌதம் புத்த நகர், இரண்டாம் கட்டத்தில் 57 மாவட்ட தலைமையக நகராட்சிகள் மற்றும் மூன்றாம் கட்டத்தில் 143 நகராட்சிகள் அடங்கும். இந்த திட்டத்தின்படி போலீசின் ரோந்து பணிகள் அதிகரிக்கப்படும், அதேபோல நீதிமன்றங்கள், சிறைகள், மதுக்கடைகள், பெண்கள் கல்லூரிகள், பூங்காக்களில் சிசிடிவி கட்டாயம் பொருத்தப்படும்" என்றும் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+