Oneindia Exclusive: வாரணாசியில் மோடியின் வாக்கு சரிவுக்கு என்ன காரணம்? நேரடி களஆய்வு ரிப்போர்ட்
லக்னோ: லோக்சபா தேர்தலின் முடிவுகள் பாஜகவுக்குள் கடும் உட்கட்சி பூசலை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக உத்தரப் பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வாங்கிய ஓட்டுக்கள் கடந்த முறையைவிட இந்த முறை குறைந்திருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசி மட்டுமல்லாது உ.பியில் பல இடங்களில் பாஜக வாக்கு வங்கி சரிந்திருக்கிறது. இந்நிலையில் ஒன் இந்தியா இந்த சரிவுக்கான காரணங்களை களத்திற்கு சென்று ஆய்வு செய்திருக்கிறது.
2014ல் தொடங்கிய பாஜக ஆட்சி, 2019ம் ஆண்டும் நீடித்தது. எனவே, 2024 தேர்தலில் அரசியல் மாற்றத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்திருந்தன. ஆனால், இந்த எதிர்பார்ப்புகளை மீறி, பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைத்திருக்கிறது. இருப்பினும் கடந்த இரண்டு முறையை போல இந்த முறை பாஜக அவ்வளவு ஹாப்பியாக இல்லை. காரணம், வாக்குவங்கி சரிவுதான். அதுவும் பாஜகவின் கோட்டையாக கருதப்பட்ட உத்தரப் பிரதேசத்தில் பாஜக சரிந்தது ஏற்றுக்கொள்ள முடியாததாக சொல்லப்படுகிறது.

தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமருக்கு புதிய கோயில் கட்டப்பட்டது. இது பாஜகவின் அரசியல் மைலேஜுக்கு கைக்கொடுக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், தேர்தல் முடிவில் அயோத்தி அமைந்திருந்த பைசாபாத் லோக்சபா தொகுதியில் பாஜக தோல்வியடைந்தது. இதில் சமாஜ்வாடி கட்சியின் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
அதேபோல வாரணாசி தொகுதியில் போட்டியிட்டிருந்த நரேந்திர மோடி, வெறும் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் வெற்றி பெற்றிருந்தார். இதற்கு முன்னர் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த இரண்டு தொகுதிகளில் ஏற்பட்ட சரிவுதான் பாஜகவின் உட்கட்சி பூசலுக்கு காரணமா? என்றால் கிடையாது. ஒட்டுமொத்தமாக உத்தரப் பிரதேசத்திலும் பல இடங்களில் பாஜக தோல்வியடைந்திருக்கிறது.
இந்நிலையில் இது குறித்து விரிவான கள ஆய்வில் ஒன் இந்தியா ஈடுபட்டிருந்தது. இந்த ஆய்வின் மூலம் கிடைத்த தகவல்களை தற்போது பகிர்ந்து வருகிறது.
வாரணாசியில் நெடுஞ்சாலைகள், விரிவுபடுத்தப்பட்ட விமான நிலையம், சுற்றுலா மேம்பாடு என பல வளர்ச்சி திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருக்கின்றன. தூரத்திலிருந்து பார்க்கும்போது எல்லாம் சரியாகத்தான் தெரிந்தது. ஆனால், நெருங்கி சென்று பார்த்தபோதுதான் உள்ளூர் பிரச்னைகள் தீவிரமாக இருந்தது தெரிய வந்தது.
அதாவது வாரணாசியில் மோடியின் வாக்கு வங்கி சரிவுக்கு முக்கிய காரணம் காசி ஹைடெக் சிட்டி திட்டம்தான். காசி துவார் ஹைடெக் சிட்டி திட்டத்திற்கு நிலத்தை எடுக்க பாஜக அரசு முயன்று வந்திருக்கிறது. இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு இருந்தது. ஆனால், தேர்தல் நெருக்கத்தில் நிலத்தை எடுக்க அதிகாரிகள் காட்டிய அவசரம், மறுமுனையில் போராட்டமாக வெடித்தது. இந்த போராட்டத்தில் விவசாய தலைவர் சந்தோஷ் படேலை காவலர்கள் ஷூ கொண்டு எட்டி உதைத்திருக்கிறார்கள்.
சந்தோஷ் படேலிடம் ஒன் இந்தியா பேட்டி எடுத்தது. அப்போது அவர் கூறியதாவது, "பிண்டாரா தாலுகாவில் விமான நிலையத்திற்கு அருகில் காசி துவார் ஹைடெக் நகரத்தை மேம்படுத்த 10 கிராமங்களிலிருந்து நிலம் கையகப்படுத்தும் திட்டம் இருந்தது. இதற்கு விவசாயிகளாகிய நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். தேர்தல் நெருக்கத்தில் அதிகாரிகள் காட்டிய அவசரம், எங்களை போராட்டத்தை நோக்கி தள்ளியது.
வாரணாசி மாவட்ட தலைமையகத்தை நோக்கி நாங்கள் ஊர்வலமாக சென்றோம். எங்கள் போராட்டங்கள் இரவு பகலாக நீடித்தது. இதில் ஈடுபட்ட தலைவர்களில் நானும் ஒருவர். ஆனால், ஒரு சில நாட்களிலேயே நான் போலீசாரால் கைது செய்யப்பட்டேன். போராட்டத்தை வாபஸ் பெறக்கோரி போலீசார் என்னை தாக்கினார்கள். ஷூ கால்களால் மிதித்தனர்" என்று கூறினார்.
48 மணி நேரத்தில் சந்தோஷ் படேல் காவல் நிலையத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். இருப்பினும் காவலர்களால் ஏற்படுத்தப்பட்ட காயம், ஷூ காலால் எட்டி உதைக்கப்பட்டது போன்றவை விவசாயிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மட்டுமல்லாது போராட்டக்களத்தில் அமைக்கப்பட்டிருந்த விவசாயிகளின் கூடாரம் கலைக்கப்பட்டது. அவர்களது வாகனங்கள் திருடப்பட்டன. இவை எல்லாமும் விவசாயிகளின் கோபத்தை மேலும் கிளறின.
வாரணாசி மாவட்டத்தில் உள்ள பிண்டாரா, சேவா புரி, ரோஹனியா ஆகிய சட்டமன்ற தொகுதிகள் படேல் சமூகத்தினர் நிறைந்த பகுதியாகும். எனவே இந்த பகுதியை சேர்ந்த அனைத்து படேல் சமூகத்தினரும் பஞ்சாயத்தை கூட்டி பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என்றும் நண்பர்களிடமும் வாக்களிக்க சொல்ல மாட்டோம் என்றும் உறுதி ஏற்றுக்கொண்டனர்.
இப்படியாக வாரணாசியில் பாஜக வாக்கு வங்கி பெரும் சரிவை சந்தித்தது. என்னதான் மூன்றாவது முறையாக மோடி பிரதமராகியிருந்தாலும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்றது, பாஜக தேசிய அளவில் தனிப்பெரும்பான்மை பெறாதது ஆகியவை அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications