உணவுகளில் எச்சில் துப்புவது, சிறுநீர் கலப்பதை கேட்டு ஆடிப்போன யோகி ஆதித்யநாத்.. போட்ட அதிரடி உத்தரவு
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஹோட்டல்களில் உணவுகளில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீரைக் கலப்பது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அதிர்ச்சிகரமான சம்பவங்களை அறிந்த முதல்வர் யோகி ஆதித்யநாத் அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவ உரிமையாளர்களுக்கும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் பெயர் மற்றும் முகவரியைக் கட்டாயமாக ஓட்டல்களில் வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதவிர ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சிசிடிவிகளை நிறுவுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், சமையல்காரர்கள் மற்றும் உணவக பணியாளர்கள் முகமூடிகள் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவுறுத்தி உள்ளார். மேலும் மாநிலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், தாபாக்கள், உணவகங்களில் தீவிர ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள உணவுகளில் எச்சில் துப்புதல் மற்றும் சிறுநீரைக் கலப்பது போன்ற சம்பவங்கள் நடப்பதாக அண்மை காலங்களில் அதிர்ச்சிகரமான புகார்கள் அதிகரித்துள்ளது. கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி, உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு உணவகத்தில் ரொட்டிகளைத் தயாரிக்கும் போது ஒரு இளம்பெண் ரொட்டியின் மீது எச்சில் துப்பும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதையடுத்து அந்த உணவகத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
முன்னதாக கடந்த வாரம், காசியாபாத் மாவட்டத்தில் பழச்சாறுகளை சிறுநீருடன் கலந்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கியதாக ஜூஸ் கடை விற்பனையாளர் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இதேபோல் கடந்த ஜூன் மாதம், நொய்டாவில் எச்சில் துப்பி அசுத்தம் செய்யப்பட்ட ஜூஸை விற்றதாகக் கூறி இருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்கள். இப்படி பல்வேறு சம்பவங்கள் அண்மைக்காலங்களில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.
இதையடுத்து அனைத்து ஹோட்டல்கள் மற்றும் உணவ உரிமையாளர்களுக்கும் கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார். ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்களின் பெயர் மற்றும் முகவரியைக் கட்டாயமாக ஓட்டல்களில் வைக்க வேண்டும் என்றும். ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சிசிடிவிகளை நிறுவுவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், சமையல்காரர்கள் மற்றும் உணவக பணியாளர்கள் முகமூடிகள் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யாநாத் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள தாபாக்கள்/ஹோட்டல்கள்/உணவகங்கள் போன்ற உணவு நிறுவனங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இருக்க வேண்டும் என்றும் வாடிக்கையாளர்கள் அமரும் இடம் மட்டுமின்றி, பிற பகுதிகளும் கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்பட வேண்டும் என்றும் ஒவ்வொரு கடையின் நிர்வாகிகளும் கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும், தேவைப்பட்டால் காவல்துறை/உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த காட்சிகள் கிடைக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் யோகி ஆதித்யாநாத் வலியுறுத்தியுள்ளார்.
உணவகங்களில் தூய்மை இருக்க வேண்டும் என்றும் உணவு தயாரிக்கும் போதும், பரிமாறும் போதும் சம்பந்தப்பட்டவர்கள் கட்டாயம் முகக்கவசம்/கையுறை அணிய வேண்டும் என்றும்இதில் எந்தவிதமான அலட்சியமும் இருக்கக்கூடாது என்றும் முதல்வர் யோகி எச்சரித்துள்ளார்.
உணவு கலப்படத்திற்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் இது தொடர்பாக பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், உணவுப் பொருட்களில் மனிதக் கழிவுகள் இருப்பது அருவருப்பானது, மனிதக் கழிவுகள் அல்லது அழுக்குப் பொருட்களுடன் உணவுப் பொருட்களைக் கலப்படம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க என உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற சம்பவங்களைக் கருத்தில் கொண்டு, மாநிலத்தில் உள்ள அனைத்து ஹோட்டல்கள், தாபாக்கள், உணவகங்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் முழுமையான விசாரணை மற்றும் ரெய்டு நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தல்களையும், அதிகாரிகளுக்கு முதல்வர் யோகி ஆதித்யாநாத் வழங்கினார்.
-
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க!












Click it and Unblock the Notifications