முத்தலாக்கில் இருந்து முஸ்லீம் பெண்களை காப்பாற்றியது பாஜக.. ஹிஜாப் சர்ச்சைகளுக்கிடையே.. மோடி பேச்சு
லக்னோ:‛‛முஸ்லிம் பெண்களின் உரிமையை தடுக்கும் புதிய வழியை கண்டுபிடிக்கின்றனர்'' என மறைமுகமாக ஹிஜாப் சர்ச்சை குறித்து பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்தார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான இங்கு 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. பிப்.,10, 14, 20, 23, 27, மார்ச் 3, 7 ஆகிய தேதிகளில் மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதற்கட்ட தேர்தல் இன்று (பிப்.,10) ஷாமிலி, ஹாபூர், கவுதம் புத் நகர், முஸாபர்நகர், மீரட், பாக்பாட், காசியாபாத், புலன்ட்சார், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு நடக்கிறது. ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று உத்தரபிரதேச மாநிலம் சகரான்பூரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். பொதுக்கூட்டத்தில் அவர் பேசும்போது, ‛‛முஸ்லிம் பெண்களின் உரிமை, வளர்ச்சியை தடுக்க புதிய வழிகளை கண்டுபிடிக்கின்றனர். உத்தர பிரதேசத்தில் முஸ்லிம் பெண்களுக்கான உரிமைகளை பாஜக தலைமையிலான அரசு காக்கும். முத்தலாக் முறையில் இருந்து முஸ்லிம் பெண்களை பாஜக விடுவித்துள்ளது. நீங்கள்(முஸ்லிம் பெண்கள்) வெளிப்படையாக பாஜகவை ஆதரிப்பதால் எதிர்க்கட்சியினர் கவலை அடைந்துள்ளனர். பாஜக எப்போதும் முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக செயல்படும் '' என்றார்.
அதாவது கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு கிளம்பி பெரும் சர்ச்சையான நிலையில் பிரதமர் மோடி முஸ்லிம் பெண்களுக்கு ஆதரவாக பேசியது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications