மேடையை சூழ்ந்த தொண்டர்கள்.. தடுப்புகளை உடைத்ததால் பரபரப்பு! பேசாமலேயே கிளம்பிய ராகுல் - அகிலேஷ்
லக்னோ: ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இணைந்து ஒன்றாகக் கலந்து கொண்ட பிரச்சாரத்தில் பொதுமக்கள் அதிகளவில் திரண்டதால் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து இந்தக் கூட்டத்தில் பேசாமலேயே இரு தலைவர்களும் கிளம்பினர்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் நாட்டிலேயே பெரிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாதி, காங்கிரஸ் இணைந்து இந்தியா கூட்டணி சார்பில் தேர்தலை எதிர்கொள்கின்றன.
குவிந்த தொண்டர்கள்: இதனால் இந்தியா கூட்டணி தலைவர்கள் அங்குத் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. அதன்படி உத்தரப் பிரதேச மாநிலம் புல்பூரில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஒன்றாகக் கலந்து கொண்டு பேசுவதாக இருந்தது. இருப்பினும், இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி தொண்டர்கள் அதிகளவில் குவிந்தனர்.
அப்போது தொண்டர்கள் பலரும் தடுப்புகளைத் தாண்டி மேடைக்கு மிக அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்தில் ஏராளமான காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர். குறிப்பாக அகிலேஷ் யாதவ் மேடைக்கு வந்த போது முன்னால் இருந்த கூட்டம் தடுப்புகளைக் கீழே தள்ளிவிட்டு மேடைக்கு அருகே திரண்டுள்ளது. இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்படுவது போன்ற கடுமையான நெரிசல் ஏற்பட்டது.
ராகுல் காந்தி: கொஞ்ச நேரத்திலேயே அதிகப்படியானோர் மேடைக்கு அருகே திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.. இருப்பினும், மக்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்த நிலையில், ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் அங்குப் பேசாமலேயே கிளம்பினர். பாதுகாப்பு அதிகாரிகள் இருவரையும் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். இதற்கிடையே அங்குப் பெருந்திரளான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்ட நிலையில், இது குறித்த படத்தை ராகுல் காந்தியும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பூல்பூர் லோக்சபா தொகுதியில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிடும் அமர்நாத் மவுரியாவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அங்குத் திரண்டிருந்த கூட்டம் குறித்த வீடியோவை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் என இரு தரப்பும் தங்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில் மேடையில் உள்ள நிர்வாகிகள், பொதுமக்களை மேடையில் இருந்து தள்ளி பின்னால் செல்லச் சொல்கிறார்கள்.
பேசாமலேயே கிளம்பினர்: இருப்பினும், கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் மேடையிலேயே அருகருகே அமர்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளனர். பின்னர் அவர்களைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.. இதையடுத்து இருவரும் பின்னர் பிரயாக்ராஜில் நடந்த மற்றொரு பேரணியில் கலந்து கொண்டனர்.
உத்தரப் பிரதேசம்: நாட்டிலேயே அதிகபட்சமாக 80 லோக்சபா தொகுதிகளைக் கொண்ட மாநிலமாக உத்த பிரதேசம் இருக்கிறது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் இங்கு தான் போட்டியிடுகிறார்கள். நாட்டில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடக்கும் நிலையில், அனைத்து கட்டங்களிலும் உபியில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இதுவரை 4 கட்டங்களில் உத்தரப் பிரதேசத்தில் 39 தொகுதிகளுக்குத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை 5ம் கட்ட தேர்தலில் 14 தொகுதிகளுக்குத் தேர்தல் நடக்கும் நிலையில், மே 25ஆம் தேதி 14 தொகுதிகளுக்கும் ஜூன் 1ஆம் தேதி 13 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications