அடடே.. இங்க பாருங்க.. நேராக 'ஜிம்'-க்கு சென்று உடற்பயிற்சி செய்த பிரதமர் மோடி.. அசத்தல் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெறும் உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதற்கான பணிகளை இப்போது இருந்தே பாஜக தொடங்கி விட்டது.

Recommended Video

    அடடே.. இங்க பாருங்க.. நேராக ஜிம்-க்கு சென்று உடற்பயிற்சி செய்த பிரதமர் மோடி.. அசத்தல் வீடியோ!

    உத்தரபிரதேச மாநிலத்தை குறிவைத்து பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடியும் உத்தரபிரதேசத்துக்கு அடிக்கடி விசிட் செய்து திட்டங்களை வாரி வழங்கி வருகிறார்.

    உ.பி.க்கு அடிக்கடி விசிட்

    உ.பி.க்கு அடிக்கடி விசிட்

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஷாஜஹான்பூரில் கங்கா எக்ஸ்பிரஸ் சாலை திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில் இன்று உத்தரபிரதேசத்துக்கு சென்ற பிரதமர் மோடி மீரட்டில் நவீன மற்றும் சிறந்த விளையாட்டு உள்கட்டமைப்புகளுடன் கூடிய மேஜர் தயான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

    விளையாட்டு பல்கலைக்கழகம்

    விளையாட்டு பல்கலைக்கழகம்

    இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி ''சுதந்திர இந்தியாவுக்கு புதிய திசையை வழங்குவதில் மீரட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. தேசப் பாதுகாப்பிற்காக எல்லையில் தியாகம் செய்தாலும், விளையாட்டு மைதானத்தில் தேசத்தின் மீதான மரியாதையாக இருந்தாலும், இப்பகுதி தேசபக்தியின் உணர்வை ஏற்றி வைத்திருக்கிறது. முந்தைய அரசுகள் ஆட்சியில் இருந்தபோது உத்தரபிரதேசத்தில் குற்றவாளிகள் தங்கள் விளையாட்டை விளையாடினர். ஆனால் இப்போது முடிவுக்கு கொண்டு வரப்பட்டது' என்று கூறினார்.

    ஜிம்-க்கு சென்ற மோடி

    ஜிம்-க்கு சென்ற மோடி

    விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னதாக பிரதமர் மோடி, விளையாட்டு வளாகத்தில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு(ஜிம்) சென்றார். அங்கு உடற்பயிற்சி செய்வதற்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்களை அவர் பார்வையிட்டார். அப்போது பிரதமர் மோடி செய்த செயல்தான் இப்போது வைரலாகி வருகிறது.

    உடற்பயிற்சி செய்த பிரதமர் மோடி

    உடற்பயிற்சி செய்த பிரதமர் மோடி

    'பாடி வெயிட் லாட்புல்' என்னும் உடற்பயிற்சி கருவியை பார்வையிட்ட பிரதமர் மோடி திடீரென பாடி வெயிட் லாட்புல் கருவி மூலம் உடற்பயிற்சி செய்தார்.இது உடலின் தசைகள் வலுப்பெறும் உடற்பயிற்சியாகும். பிரதமர் மோடி சில நிமிடம் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 'உடற்பயிற்சியில் எப்போதும் ஆர்வம் கொண்டவர் பிரதமர் மோடி' என்று நெட்டிசன்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+