உத்தரப்பிரதேசத்தில் பரபர.. முஸ்லிம் குல்லா போட்டு செல்போன் பறிப்பு! கடைசியில் காத்திருந்த டுவிஸ்ட்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்போல் குல்லா அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட திருடனை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.
உத்தரப்பிரதேச மாநில ஜான்பூரில் பெண் ஒருவர் காலை நேரத்தில் தனியாக நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது ஒரு இளைஞர் தலையில் இஸ்லாமியர்கள் அணியும் குல்லாவுடன் அந்த பெண்ணை நோக்கி ஓடிச் சென்று அவரது கையில் இருந்த செல்போனை பறிக்க முயன்றார். அந்த பெண் பிடி கொடுக்காமல் அந்த திருடனிடம் போனை காப்பாற்ற முயன்றார். ஒரு கட்டத்தில் அந்த திருடன் வலுவாக பிடித்து இழுத்து செயினை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றான்.

பதைபதைப்பை ஏற்படுத்தும் இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை சேகரித்து, அதன் அடிப்படையில் அவர்கள் தீவிர விசாரணை செய்தனர். இதற்காக தனிப்படை அமைத்து குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டார்கள்.
https://x.com/Benarasiyaa/status/1709584074011230480?s=20தீவிர விசாரணையின் முடிவில் செல்போனை பறித்தவர் பெயர் பிரமோத் சேத் என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் திருடிச் சென்ற செல்போனை பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பிரமோத் சேத் பொற்கொல்லர் என்பதும், பலமு சேத் என்று அவருக்கு வேறொரு பெயர் இருப்பதும் தெரியவந்தது.
இதுகுறித்து ஜான்பூர் போலீசார் அளித்து இருக்கும் விளக்கத்தில், “ஜான்பூரில் அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்ட பெண்ணிடம் செல்போன் பறித்துச் சென்ற நபரை தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டோம். அப்போது அவரது பெயர் பிரமோத் சேத் என்கிற பலமு சேத் என்பது, பொற்கொல்லராக இருந்து வருவதும் தெரியவந்தது.
அவரை கைது செய்து, பெண்ணிடம் திருடிச் சென்ற செல்போனை கைப்பற்றி இருக்கிறோம். போலீசாரை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகவே பிரமோத் சேத் தன்னுடைய அடையாளத்தை மறைத்து தலையில் குல்லா அணிந்து இருக்கிறார். இருப்பினும் நாங்கள் அவரை கைது செய்து உள்ளோம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications