லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மழையால் கரையும் கங்கை கரைகள்., கொத்துக்கொத்தாக வெளிவரும் பிணங்கள்.. கவலையில் அலகாபாத்

Google Oneindia Tamil News

லக்னோ : இந்த ஆண்டு பருவமழை பிரயாக்ராஜ் (அலகாபாத்) மாவட்ட நிர்வாகத்திற்கு பெருங் கவலையாக உள்ளது, ஏனெனில் கங்கையில் அதிகரித்து வரும் நீரின் அளவு வேகமாக அதன் கரைகளை அரிக்கிறது, இதன் விளைவாக, கங்கை கரையோரத்தில் உள்ள பாபமாவ் காட்டில் புதைக்கப்பட்ட ஏராளமான உடல்கள் மீண்டும் வெளியே தெரியும் நிலைக்கு வந்துள்ளன.

இப்படி வெளியே தெரியும் உடல்களை கண்டுபிடித்து அத்தகைய உடல்களை தகனம் செய்யும் பொறுப்பை பிரயாகராஜ் மாநகராட்சி (பி.எம்.சி) செய்து வருகிறது.

இன்றுவரை, பிரயாக்ராஜ் மாநகராட்சியின் மண்டல அதிகாரி நீரஜ் சிங், பாபமாவ் காட்டில் 24 உடல்களை தகனம் செய்துள்ளார், அவற்றில் 11 உடல்கள் கடந்த வாரத்தில் தகனம் செய்யப்பட்டன. செவ்வாய்க்கிழமை ஏழு சடலங்களும் புதன்கிழமை காலை மூன்று உடல்களும் தகனம் செய்யப்பட்டன.

ஒரே வாரத்தில்.. அடுத்தடுத்த ஆக்சன்.. வேகம் காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. அடுத்த செக் யாருக்கு? ஒரே வாரத்தில்.. அடுத்தடுத்த ஆக்சன்.. வேகம் காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. அடுத்த செக் யாருக்கு?

தகனம் பணி

தகனம் பணி

தற்போது, ​​ கங்கை கரையில் புதைக்கப்பட்ட சுமார் 70 உடல்கள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளன. அவற்றையும் தகனம் செய்வதற்கான பணிகளில் அதிகாரிகள் குழு இறங்கி உள்ளது கங்கையின் மணல் கரையில் புதைக்கப்பட்டிருக்கும் உடல்களை தினமும் நீரஜ் சிங் மற்றும் அவரது குழுவினர் ஆய்வு செய்கிறார்கள்.

வேத மந்திரங்கள்

வேத மந்திரங்கள்

தகனம் செய்யும் போது அனைத்து சடங்குகளும் எந்த குறைபாடும் இல்லாமல் பின்பற்றப்படுவதை நீரஞ் சிங் உறுதிசெய்கிறார். இது தொடர்பாக கூறும் போது "நாங்கள் யாருடைய உடல்களை தகனம் செய்கிறோம் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தேவையான அனைத்து சடங்குகளையும் மத ரீதியாக பின்பற்றுவது எனது பொறுப்பு என்று நான் உணர்கிறேன். வேத மந்திரங்கள் முழங்க தகனம் செய்கிறோம். இறந்தவர்களை எனது சொந்த குடும்பமாகக் கருதுகிறேன்," என்றார் சிங்.

24 உடல்கள் தகனம்

24 உடல்கள் தகனம்

கங்கைக் கரையில் புதைக்கப்பட்ட உடல்களை தகனம் செய்யும் இந்த நடைமுறை ஜூன் 4 ஆம் தேதி தொடங்கியது. ஆற்றின் ஓரத்தில் புதைக்கப்பட்டு வெளியே தெரிந்த ஆறு சடலங்கள் முதல் நாளில் கண்டுபிடிக்கப்பட்டு தகனம் செய்யப்பட்டது. இதுவரை 24 உடல்களை தகனம் செய்துள்ளார்கள். ஒவ்வொரு உடலையும் தகனம் செய்வதற்காக பிரயாக்ராஜ் (அலகாபாத்) மாநகராட்சி சுமார் ரூ .3,000 தொகையை தருகிறது.

மழை

மழை

கொரோனா பிரச்சனை காரணமாக ஏராளமான உடல்கள் கங்கை ஆற்றின் கரையோரம் தூக்கிவீசப்பட்டது. அதையும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடித்தும் தகனம் செய்து வந்த அதிகாரிகள் தற்போது மழை காரணமாகவும் பிணங்களை தகனம் செய்யும் வேலையை செய்ய தொடங்கி உள்ளனர்.

English summary
the early arrival of monsoon this year is a worry for the district administration as the increasing level of water in the Ganga is fast eroding its banks, and as a result, a large number of bodies buried on the Phaphamau ghat are facing the threat of exposure.‘
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X