Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரியங்காவிற்கு நேர்ந்தது அநீதி.. அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிக்காட்டி விமர்சித்த ப.சி.. விளாசல்!

Subscribe to Oneindia Tamil

லக்னோ: லக்கிம்பூர் கேரி சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது, உரிய காரணம் சொல்லாமல் அவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது சட்டத்திற்கு எதிரானது என்று காங்கிரஸ் மூத்த எம்பி ப. சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார்.

லக்கிம்பூரில் கடந்த வாரம் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க பிரியங்கா காந்தி சென்ற போது அவர் போலீசார் மூலம் தடுக்கப்பட்டார். 40 மணி நேரம் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருந்த அவர் 24 மணி நேரத்திற்கு பின்தான் அதிகாரபூர்வமாக கைது செய்யப்பட்டார். இவரின் கைது கடும் விமர்சனங்களை சந்தித்தது.

பெண் அரசியல் தலைவர் ஒருவரை ஆண் போலீசார் தடுப்பு காவலில், எந்த அதிகாரபூர்வ உத்தரவும் இன்றி தடுத்து நிறுத்தியதும், இரவு முழுக்க அடைத்து வைத்து இருந்ததும் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

ப. சிதம்பரம்

ப. சிதம்பரம்

பிரியங்கா காந்தி இப்படி தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில ஊடக தளத்தில் கண்டன கட்டுரை ஒன்றை எழுதி இருக்கிறார். அந்த கட்டுரையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்கள், பிரதமர் என்று எல்லோரும் அரசியலமைப்பு சட்டத்தை படிக்க வேண்டும். எல்லோரும் அரசியலமைப்பு சட்டப்படிதான் பதவி ஏற்று உள்ளனர். அதில் என்ன சட்டம் இருக்கிறது என்ற விவரம் இவர்களுக்கு தெரிய வேண்டும்.

சுதந்திரம்

சுதந்திரம்

மக்களின் சுதந்திரத்தையும் சகோதரத்துவத்தையும் காப்பது இவர்கள் கடமை. சட்டங்களை உருவாக்கவே நாம் தலைவர்களை தேர்வு செய்கிறோம். ஆனாலும் மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிட கூடிய சட்டங்களை அரசியல் தலைவர்கள் தீட்ட முடியாது. மக்களின் தனி மனித உரிமைகள். சுதந்திரங்களில் அதிகாரங்கள் தலையிட முடியாது. ஒருவர் கைது செய்யப்படுகிறார் அல்லது தடுப்பு காவலில் வைக்கப்படுகிறார் என்றால் அவருக்கான உரிமைகளை மறுக்க முடியாது.

உரிமைகள்

உரிமைகள்


அவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை பெற, வழக்கறிஞர்களை சந்திக்க உரிமை வழங்கப்பட வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். அதேபோல் யார் கைது செய்யப்பட்டாலும் அவர்கள் 24 மணி நேரத்திற்குள் அருகில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஒப்படைக்கப்பட வேண்டும். 24 மணி நேரத்திற்குள் இவர்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும். மாஜிஸ்திரேட் அனுமதி இல்லாமல் எந்த ஒரு நபரும் 24 மணி நேரத்திற்குள் காவலர்களால் கைது செய்யப்பட்டு அடைத்து வைத்திருக்கப்பட கூடாது.

லக்கிம்பூர்

லக்கிம்பூர்

லக்கிம்பூரில் விவசாயிகள் மீது எஸ்யுவி ஏறியதால் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் கொலை செய்யப்பட்டனர். விவசாயிகள் படுகொலை காரணமாக அங்கே பெரிய கலவரம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நேரத்தில் மக்களுக்கு ஆறுதல் சொல்வதற்காக அரசியல் தலைவர்கள் சம்பவ இடத்திற்கு செல்வது வழக்கம்தான். தனிமனித சுதந்திரத்தின் காரணமாக யாருக்கும் சம்பவ இடத்திற்கு செல்ல முழு அதிகாரம் உள்ளது.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

ஆனால் லக்கிம்பூர் கேரி சென்ற பிரியங்கா காந்தி சித்தாபூர் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டார். எந்த காரணமும் இன்றி தடுத்து நிறுத்தப்பட்டவர் மறுநாள் அக்டோபர் 4ம் தேதி காலை 4.30 மணிக்கு கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்படுகிறார். கிரிமினல் கோட் சட்ட பிரிவான 151ன் கீழ் அவர் கைது செய்யப்படுகிறார். பிஏசி விடுதியில் அவர் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டு இருக்கிறார். இதில் நிறைய விதி மீறல் செய்யப்பட்டுள்ளது.

விதி மீறல்

விதி மீறல்

பிரியங்கா காந்தி எந்த அடிப்படையில் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படவில்லை.
கைது செய்யப்பட்டதற்கான அத்தாட்சி அவரிடம் கொடுக்கப்படவில்லை. அதில் அவரின் கையெழுத்து இல்லை.
மாஜிஸ்திரேட் கோர்ட்டில் அவர் ஆஜர்படுத்தப்படவில்லை.
எப்ஐஆர் காபி பிரியங்கா காந்திக்கு கொடுக்கப்படவில்லை.
எந்த பிரிவில் கீழ் கைது செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை பிரியங்கா காந்தி அக்டோபர் 5ம் தேதிதான் தெரிந்து கொள்கிறார்.

அநீதி

அநீதி

பிரியங்கா காந்தியின் கைதில் அநீதி அரங்கேறி உள்ளது. பல்வேறு சட்ட விதிகள் மீறப்பட்டுள்ளது. கணக்கில் கொள்ள முடியாத அளவிற்கு சட்டங்கள் இதில் மீறப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டத்தை எடுங்கள் அதில் சட்டம் 19, 21 மற்றும் 22; பிரிவுகள் 41B, 41D, 46, 50, 50A, 56, 57, 60A, 151, குறிப்பாக இணை பிரிவுகள் (2), மற்றும் 167 மற்றும் பிரிவுகள் 107, 116 ஆகியவற்றை பாருங்கள். பல விதிகளை இதில் மீறி உள்ளனர்.

மீறல்

மீறல்

உத்தர பிரதேச அரசுக்கு மட்டும் ஏதாவது தனி சட்டம் இருக்கிறதா? உத்தர பிரதேசத்தில் இருப்பது இந்திய சட்டம் கிடையாது.. அது ஆதித்யநாத் சட்டம். லக்கிம்பூர் கேரி சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டது, உரிய காரணம் சொல்லாமல் அவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தது சட்டத்திற்கு எதிரானது அவருக்கு நேர்ந்தது அநீதி என்று ப. சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+