உ.பி.,யில் பிரியங்கா காந்தி காலண்டர் விநியோகம் படுஜோர்! ராகுல் முகத்தை தேடும் தொண்டர்கள்
உத்தரபிரதேசம்: 2022 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, உ.பி.யில் ஒவ்வொரு வீட்டிற்கும் பிரியங்கா காந்தி புகைப்படங்கள் அச்சிடப்பட்ட காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
உத்தரபிரதேசத்தில் எதிர்வரும் 2022ம் ஆண்டு தேர்தலை கணக்கில் கொண்டு, அங்கு பிரியங்கா காந்தியை முன்னிலைப்படுத்தும் விதமாக அவரது படங்கள் நிறைந்த காலண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.

உ.பி., மாநிலம் முழுவதும் பரவலாக ஒவ்வொரு நகரம் முதல் கிராமங்கள் வரை வீடு வீடாக சென்று காங்கிரஸ் தொண்டர்கள், பிரியங்கா காந்தி காலண்டர்களை மக்களுக்கு கொடுக்கின்றனர்.
முதற்கட்டமாக, 10 லட்சம் பிரதிகள் உ.பி., மாநில காங்கிரஸ் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 12 பக்கங்கள் கொண்ட இந்த காலண்டரின் ஒவ்வொரு பக்கங்களிலும் விதவிதமான போஸ் கொண்ட பிரியங்காவின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
சோன்பத்ராவில் ஆதிவாசி பெண்களுடன் பிரியங்கா உரையாடுவது, அமேதியில் பெண்களைச் சந்திப்பது, உஜ்ஜைனி மஹாகாளி கோவிலில் பிரார்த்தனை செய்வது, லக்னோவில் காந்தி ஜெயந்தி விழாவில் பங்கேற்பது, வாரணாசியில் ரவிதாஸ் ஜெயந்தியில் பங்கேற்றது, ஹத்ராஸ் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தது, தேர்தல் பேரணியில் உரையாற்றியது, அசாம்கரில் குழந்தைகளைச் சந்தித்தது, ஹரியானா ரோட்ஷோவில் பங்கேற்றது என வெரைட்டி கலந்து பிரியங்காவின் படங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
2022 சட்டப்பேரவை தேர்தலில், பிரியங்கா காந்தி தலைமையில் உ.பி.யில் களமிறங்க காங்கிரஸ் திட்டமிட்டிருப்பதால், கட்சியை மக்களிடையே பலப்படுத்த இந்த காலண்டர் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது காங்கிரஸின் பொதுச் செயலாளர்களில் ஒருவராக உள்ள பிரியங்கா காந்தியை உ.பி., முதல்வராக்கவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
உட்கட்சி பூசல் காரணமாக அகில இந்திய காங்கிரஸ் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகிய பிறகும், காங்கிரஸின் தேசிய முகமாக பிரியங்கா காந்தியை அடையாளப்படுத்தும் முயற்சிகள் அரங்கேறி வருகின்றன.
மத்தியில் இரண்டாவது முறையாக பாஜக ஆட்சி பிடித்ததற்கு காங்கிரசின் பலவீனமும் முக்கிய காரணம் என்றால் அது மறுப்பதற்கில்லை. ஆகவே, இப்போதே கட்சியை பலப்படுத்தும் நோக்கில் காங்கிரஸ் அடுத்தடுத்து வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் தொடக்க புள்ளியாகவே உ.பி.யில் பிரியங்காவை முதல்வராக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications