அடுத்தடுத்த டென்ஷன்.. எங்கே போனாலும் ஏன் இப்படி செய்றீங்க?.. பிரியங்கா ஆவேசம்.. பரபரக்கும் உ.பி.
உபியில் மீண்டும் பிரியங்கா காந்தி கைதானார்
லக்னோ: உபி காவல்துறை காவலில் உயிரிழந்த துப்புரவு பணியாளரின் குடும்பத்தை சந்திக்க சென்ற பிரியங்கா காந்தியை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.. இதனால் அங்கு மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் அருண் வால்மீகி என்ற இளைஞர்.. ஆக்ராவில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில், ஆதாரங்களைச் சேகரித்து வைக்கும் கட்டிடத்தில் துப்புரவு பணியாளராக இருந்து வந்தார்.
அந்த குடோனில் 25 லட்சம் ரூபாய் திடீரென திருடு போனது... இந்த பணம் திருடு போனது தொடர்பாக துப்புரவு தொழிலாளி அருண் வால்மீகியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

உயிரிழப்பு
விசாரணையில், பணம் திருடியதை அவர் ஒப்புக் கொண்டார்.. மேலும் திருடிய பணத்தை ஒரு குடோனில் பதுக்கி வைத்துள்ளதாகவும் சொன்னார்.. அதன்பேரில் போலீசாரும் சென்று அங்கிருந்த 15 லட்சம் ரூபாயை மீட்டனர். ஆனால், திடீரென அந்த துப்புரவு தொழிலாளிக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்... இதனிடையே, போலீசார் தான் அவரை அடித்து கொன்றுவிட்டதாக குடும்பத்தினர் புகார் தந்தனர்..
Recommended Video

தொழிலாளி
இதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.இப்படிப்பட்ட சூழலில், மர்மமாக இறந்துபோன துப்புரவு தொழிலாளியின் குடும்பத்தினரை சந்திப்பதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, இன்று பிற்பகல் ஆக்ரா நோக்கி சென்றார்... அப்போது அவரை லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையின் முதல் டோல்கேட்டில் போலீசார் தடுத்து நிறுத்தினர்... இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது... போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்தார்.

வாக்குவாதம்
"கட்சி ஆபீஸ் தவிர, நான் எங்கே போனாலும், எந்த இடத்துக்கு போனாலும் ஏன் இப்படி தடுத்து நிறுத்துறீங்க? இதனால் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது.. ஏன் இந்த அரசாங்கம் இப்படி எதற்கு பயப்படுகிறது?.. மக்களுக்கு நடக்கும் அநீதியை எல்லாம் பார்த்துவிட்டு, சொகுசு விடுதியில் உட்கார்ந்திருக்க முடியுமா" என்று கேள்வி எழுப்பினார்.

கலெக்டர் உத்தரவு
தற்போது 144 தடை உத்தரவு அங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், உரிய அனுமதி இல்லாமல் பிரியங்கா அங்கு வந்ததாலும், தடுத்து நிறுத்தப்பட்டதாக உபி போலீசார் விளக்கம் தந்தனர்.. இது மாவட்ட கலெக்டரின் உத்தரவு என்று கூறி பிரியங்காவை தடுத்தனர்... அதையும் மீறி பிரியங்கா புறப்பட முயற்சித்ததால் போலீஸார் அவரை கைது செய்தனர். பிரியங்கா கைது செய்யப்பட்டதுமே பெரும் பரபரப்பு மீண்டும் எழுந்தது.. "நாட்டில் எங்கும் சுதந்திரமாக நடமாடுவதற்கு முழு உரிமையும் உள்ளது என்ற அரசியலமைப்பு சட்டத்தை சுட்டிகாட்டியபின் அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

2வது முறை
ஏற்கனவே இப்படித்தான், தன்னை உபி போலீசார் தடுத்த நிறுத்தப்பட்டதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.. இப்போது இந்த மாதத்தில் மட்டும், இதே உபியில் 2வது முறையாக பிரியங்கா தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, 144 காரணம் காட்டி பிரியங்கா காந்தியை தொடர்ந்து பயணம் செய்ய தடுத்து நிறுத்தியபோது, போலீசார், பிரியாங்காவிடம் செல்பி எடுத்து கொண்டனர்.. அந்த போட்டோக்கள் இணையத்தில் தற்போது வெளியாகி வைரலாகி கொண்டிருக்கின்றன.


Click it and Unblock the Notifications
