லக்னோ அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒட்டுக்காக ஒருவரை மரணப்படுக்கைக்கு தள்ளிவிட்டார் ராகுல் காந்தி... ஸ்மிருதி இராணி ஆவேசம்

Google Oneindia Tamil News

லக்னோ: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒட்டுக்குக்காக ஒருவரின் மரணத்திற்கு காரணமாகி உள்ளார் என்றும், அவர் ஏன் இன்றைக்கு அமேதிக்கு வரவில்லை என பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.

நாடு முழுவதும் இன்று 5ம் கட்ட மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதியும் ஒன்று.

Rahul Sent a Man to Deathbed for Votes, Smriti Irani attacks congress chief

இந்நிலையில் ராகுல் காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் போட்டியிடும் ஸ்மிருதி இராணி இன்று செய்தியார்களிடம் பேசுகையில், "அமேதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிரஸ்டியாக உள்ள மருத்துவமனையில், பிரதம மந்திரியின் ஆயுஷ்மேன் பாரத் என்ற மருத்துவ அட்டை வைத்திருந்ததற்காக, ஏழைத்தொழிலாளிக்கு சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்" என்றார்.

ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை!ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கு.. ப.சிதம்பரத்தை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை!

மேலும் நேரு- இந்திரா காந்தி குடும்பத்தினர் குறித்து கடுமையாக விமர்சித்த ஸ்மிருதி இராணி, அரசியல் ஆதாயத்திற்காக எந்த அளவுக்கும் அவர்கள் தரம் தாழ்ந்து செல்வார்கள். இந்த முறை அமேதி தேர்தலில் மனித நேயம் அதிகமாகும். ராகுல் காந்தியின் மதிப்பு சரியும். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அமேதி மக்களில் ஒருவர் என கூறிக்கொள்கிறார். அப்படிப்பட்டவர் ஏன் வாக்குப்பதிவு நாளில் அமேதிக்கு வரவில்லை" இவ்வாறு ஸ்மிருதி இராணி விமர்சித்தார்.

English summary
Smriti Irani attacks congress chief rahul gandhi, 'he Sent a Man to Deathbed for Votes, why Isn't He in Amethi Today?'
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X