ராகுல் குறித்து பேசும் போது.. சட்டென எமோஷ்னலான சோனியா காந்தி.! ரேபரேலியில் நெகிழ்ச்சி சம்பவம்
லக்னோ: ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்திக்காகப் பிரச்சாரம் செய்த சோனியா காந்தி, ஒரு கட்டத்தில் சற்று எமோஷ்னல் ஆனார். தனது மகனுக்கும் அன்பையும் பாசத்தையும் வழங்க வேண்டும் என அவர் ரேபரேலி மக்களிடம் கோரிக்கை வைத்தார்.
நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. அதில் 4 கட்ட தேர்தல் நடந்து முடிந்துவிட்ட நிலையில், அடுத்து 3 கட்ட தேர்தல் வரும் நாட்களில் நடைபெறுகிறது.

இதில் தேசியளவில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது.. இரு தரப்பிலும் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.
ரேபரேலி தொகுதி: ராகுல் காந்தி இந்த முறை வயநாடு தொகுதியில் போட்டியிடும் நிலையில், அத்துடன் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிடுகிறார். அவர் அமேதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவர் ரேபரேலியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ரேபரேலி என்பது சோனியா காந்தி கடந்த 20 ஆண்டுகளாக எம்பியாக இருந்த தொகுதியாகும்.
எமோஷ்னலான சோனிசா: இப்போது சோனியா காந்தி ராஜ்யசபாவுக்கு தேர்வாகிவிட்ட நிலையில், ராகுல் காந்தி அங்கு களமிறங்குகிறார். இதற்கிடையே இன்று ரேபரேலியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி, தனக்கு அளித்த அதே அன்பையும் பாசத்தையும் தனது மகன் ராகுலுக்கும் வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.
அங்குப் பேசிய சோனியா காந்தி, "என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன். என்னை நீங்கள் உங்களில் ஒருவராகப் பார்த்து அன்பையும் பாசத்தையும் அளித்தீர்கள். அதேபோல ராகுலுக்கும் அதே அன்பையும் பாசத்தைத் தர வேண்டும்.. ராகுல் உங்களை ஏமாற்ற மாட்டார்" என்று சொல்லி எமோஷ்னலானார்.
மிகப் பெரிய சொத்து: தொடர்ந்து பேசிய அவர், "20 ஆண்டுகள் எம்.பி.யாக பணியாற்ற ரேபரேலி மக்கள் எனக்கு வாய்ப்பளித்ததே எனது வாழ்க்கையின் மிகப் பெரிய சொத்து. அதை நான் மறக்கவே மாட்டேன். ரேபரேலி மக்களும் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான்.. உங்களுடன் நீண்ட காலம் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ரேபரேலி மக்களுக்கு எனது இதயத்தில் இருந்து நான் மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்..
ரேபரேலி எனது குடும்பம் என்றால் அமேதி எனது வீடு போன்றது.. இந்த மண்ணுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் நூற்றாண்டு உறவு இருக்கிறது. இது கங்கை நதியைப் போன்ற புனிதமான ஒரு உறவு.. 100 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய உறவு இப்போது வரை தொடர்கிறது" என்றார்.
ரேபரேலி தொகுதி: ரேபரேலி தொகுதியைப் பொறுத்தவரை அது காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படுகிறது. 1952 முதல் இடைத்தேர்தல்கள் சேர்த்து அங்கு 20 முறை தேர்தல் நடந்துள்ள நிலையில், அதில் 17 முறை காங்கிரஸ் கட்சியே வென்றுள்ளது. குறிப்பாக பெரோஸ் காந்தி, இந்திரா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் போட்டியிட்ட தொகுதியாகும்.
கடந்த 2019இல் நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனியா காந்தி 5.34 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 1.67 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட தினேஷ் பிரதாப் சிங் வெறும் 3.67 லட்சம் வாக்குகளை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications