சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கு தீர்வு காண வாரம் தோறும் ஆய்வுக்கூட்டம்.. போலீசாருக்கு யோகி ஆர்டர்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு தீர்வு காண வாரம்தோறும் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்யவும் பிரச்சினைகளை தீர்க்கவும் அதிகாரிகள் மாவட்டம் மற்றும் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டங்களை வாரம் தோறும் நடத்த வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். இந்தக் கூட்டத்தில் குற்ற சம்பவங்கள், நிலுவையிலுள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று அலட்சியம் காட்டும் அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.

மேலும், ஒவ்வொரு மாவட்ட எஸ்.எஸ்.பி/ எஸ்.பி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய யோகி ஆதித்யநாத், ஒவ்வொரு காவல் நிலையத்தையும் வாரம் தோறும் ஆய்வு செய்து மாநிலத்தில் குற்ற சம்பவங்களை குறைக்க வேண்டும் என்று கூறினார். மேலும், புகார்களுக்கு 100 சதவிகிதம் தீர்வு காண வேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது போன்ற சட்ட நடைமுறைகளில் துரிதமாக செயல்படுவதோடு நிலுவையில் வழக்குகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் ஏடிஜி/ஐஜி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகள் 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுக் கூட்டமும் டிஜிபி மற்றும் ஏடிஜி அதிகாரிகள் மண்டல அளவில் மாதம் தோறும் ஆய்வுக் கூட்டமும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். மேலும், ஒவ்வொரு குற்ற சம்பங்களில் இருந்தும் பாடம் கற்றுக்கொண்டு கூடுதல் குற்ற செயல்களை குறைக்கவும் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எண்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து பேசிய யோகி ஆதித்யநாத், தற்போது சரக அளவில் சைபர் கிரைம் காவல் நிலையங்கள் உள்ளன. மாவட்ட அளவில் அவற்றை தொடங்குவதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். புகார்களுக்கு 100 சதவிகிதம் தீர்வு காண வேண்டும் என்றும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது போன்ற சட்ட நடைமுறைகளில் துரிதமாக செயல்படுவதோடு நிலுவையில் வழக்குகளுக்கும் தீர்வு காண வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications