மகா கும்பமேளாவின் ’பிரவுன் ப்யூட்டி’..கண்ணாலே கலங்கடித்த மோனலிசா! ஊருக்கு வண்டி ஏற்றி விட்ட அப்பா!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா தொடங்கி வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ருத்ராட்ச மாலை விற்று வந்த மோனலிசா போஸ்லே என்ற பெண் அவரது கண்கள் காரணமாக இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். தொடர்ந்து அவரை தேடி நாளுக்கு நாள் யூடியூப் சேனல்கள் படை எடுத்து வந்ததால் தனது தந்தையால் சொந்த ஊருக்கே அனுப்பப்பட்ட அவர், தற்போது அங்கு யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து தனது மேக்கப் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று புனித நதிகள் சங்கமிக்கும் இடம் திரிவேணி சங்கமம். திரிவேணி சங்கத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்ப மேளா நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

அந்த வகையில் இந்த ஆண்டு மகா கும்பமேளா நிகழ்வை பாஜகவின் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. ஜனவரி 12 ஆம் தேதி தொடங்கிய இந்த மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறது.
இந்தியா முழுவதும் மட்டும் அல்லாது வெளிநாடுகளில் இருந்தும் கூட பக்தர்கள் யோகிகள் சாமியார்கள் அங்கு திரண்டுள்ளனர். இதுவரை கோடி கணக்கானோர் மகா கும்ப மேளாவில் புனித நீராடி இருக்கும் நிலையில் மேலும் பலர் அங்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்ப மேளாவில் ருத்ராட்ச மாலைகளை விற்கும் இளம் பெண் ஒருவர் அனைவரின் கவனத்தை ஈர்த்தார்.
ஆரம்பத்தில் சிகப்பு நிற ஆடையில் பெண் துறவி போலவே காட்சியளித்து அவரை 'பிரவுன் பியூட்டி' என பலரும் சமூக வலைதளங்களில் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமாக்கினர். பின்னர் அவர் மத்திய பிரதேச மாநிலம் இந்துூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே என்பதும் திருவிழா காலங்களில் ருத்ராட்ச மாலை உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அவரது புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.
இந்த நிலையில் அவரை காண்பதற்காகவே பலரும் கும்பமேளாவுக்கு வரத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் தினமும் நூற்றுக்கணக்கான யூடியூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுன்சர்கள் அவரைச் சுற்றி கேமராவோடு சூழத் தொடங்கினர். இதனால் அவரது வியாபாரத்தை கவனிக்க முடியவில்லை. அது மட்டும் அல்லாமல் அவரது பாதுகாப்புக்கும் இடையூறு ஏற்பட்டதால் அவரது தந்தை அவரை சொந்த ஊரான இந்தூருக்கே அனுப்பி வைத்தார்.
இந்த நிலையில் இந்தூருக்குச் சென்ற அந்த பெண் அங்கு அழகு நிலையம் ஒன்றுக்கு சென்று தன்னை அழகு படுத்திக் கொண்டுள்ளார். மேலும் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தான் மேக்கப் செய்து கொள்ளும் வீடியோவையும் பகிர்ந்து இருக்கிறார். மேலும் ட்விட்டரிலும் அந்த வீடியோவை அவர் பகிர்ந்து இருக்கும் நிலையில் ஒரு மில்லியன் லைக்ஸ்கள் கிடைத்துள்ளது. மேலும் இந்தப் பெண்ணை வைத்து பலர் ஓவியங்களையும் வரைய ஆரம்பித்துள்ள நிலையில் தானும் தினமும் புதுப்புது வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார்.
அது பார்வையாளர்களை மிகவும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்பது குறித்து அவர் திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. சாதாரண ருத்ராட்ச மாலை விற்ற ஒரு பெண் இன்று இந்திய அளவில் பிரபலமாக இருப்பதற்கு சோசியல் மீடியா தான் முக்கிய காரணம். அதே நேரத்தில் அந்த இளம் பெண்ணுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், தினமும் நூற்றுக்கணக்கானோர் அந்த பெண்ணை பின் தொடர்வதால் பெற்றோர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications