யோவ் இங்க என்னயா பண்ணுற.. போலீசுக்கு பயந்து அகிலேஷ் யாதவின் நண்பர் பதுங்கிய இடத்தை பாருங்க
லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியின் முன்னாள் பொருளாளர் கைய்ஷ் கான் கைது நடவடிக்கைக்கு பயந்து வீட்டு சிலாப்பில் படுத்து கொண்டு மெத்தை விரிப்பை வைத்து மறைத்து கொண்டு பதுங்கியிருந்தார். ஆனால் போலீசார் மெத்தை விரிப்பை இழுத்து அவரை அதிரடியாக கைது செய்த நியைில் அதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ். தற்போது எம்பியாக உள்ள அகிலேஷ் யாதவ் சமாஜ்வாதி கட்சியின் தலைவராக செயல்பட்டு வருகிறார். இந்த கட்சியின் முன்னாள் பொருளாளராக கைய்ஷ் கான். இவர் அகிலேஷ் யாதவுக்கு மிகவும் நெருக்கமானவர். நண்பர்கள் போல் இருவரும் செயல்பட்டு வருகின்றனர்.

அதேபோல் நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த மாதம் 25ம் தேதி அகிலேஷ் யாதவ் அவரை சந்தித்து பேசினார். அப்போது அகிலேஷ் யாதவ் விமர்சனத்துக்கு உள்ளானார்.
இதையடுத்து கடந்த 28 ம் தேதி வழக்கு ஒன்று கனாஜ் மவட்ட மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு அஷ்சோத் மோகன் அக்னிகோத்ரி அதிரடியான உத்தரவை பிறப்பித்தார். ஆகஸ்ட் 28 ம்தேதி முதல் 6 மாதத்துக்கு கைய்ஷ் கான் கனாஜ் மாவட்டத்துக்குள் வரக்கூடாது என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து அவர் மாவட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தான் நீதிமன்ற உத்தரவை மீறி கைய்ஷ் கான் மாவட்டத்துக்குள் நுழைந்துள்ளார். அவர் ஜான் மாவட்டம் இதுபற்றி போலீசாருக்கு தகவல் சென்றது. இதையடுத்து போலீசார் கைய்ஷ் கான் மற்றும் அவரது சகோதரரை தேடி சென்றனர். வீட்டின் ஒவ்வொரு இடங்களிலும் போலீசார் தேடினர். ஆனால் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இறுதியாக போலீசார் கைய்ஷ் கானை அவரது சகோதரர் வீட்டில் தேடினர். அப்போது வீட்டில் உள்ள சிலாப் திரை போட்டு மறைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த திரையை விலக்கி பார்த்தனர். அப்போது மெத்தை விரிப்பு சுருட்டி வைக்கப்பட்டு இருந்தது. அதனை போலீசார் இழுத்து பார்த்தபோது மெத்த விரிப்புக்குள் கைய்ஷ் கான் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
சிலாப்பில் மெத்தை விரிப்புக்குள் பதுங்கி இருந்ததை பார்த்த போலீசார் சிரித்தனர். அதன்பிறகு அவரை கைது செய்து போலீசார் அழைத்து சென்றனர். இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி வினோத் குமார் கூறுகையில், ‛‛நீதிமன்ற உத்தரவை மீறி கைய்ஷ் கான் சகோதரர் வீட்டில் ரிலாக்ஸ் செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது சில கிரிமினல் வழக்குகள் உள்ளன. அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications