”தந்தையின் இடத்தில் மனைவி” உ.பி. லோக் சபா இடைத்தேர்தலில் டிம்பிள் யாதவ் போட்டி.. சமாஜ்வாதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சியை நிறுவியவர் முலாயம் சிங் யாதவ். இவர் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராக 3 முறை இருந்தவர்.

வயது முதிர்வு காரணமாக பல்வேறு நோய்களால் அவதிப்பட்ட முலாயம் சிங் யாதவ், கடந்த அக்.10ம் தேதி உயிரிழந்தார். தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர், தொண்டர்களின் அஞ்சலிக்கு பின் அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

டிச.5ல் இடைத்தேர்தல்

டிச.5ல் இடைத்தேர்தல்

இவர் மைன்புரி மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தார். இவரது மறைவுக்கு பின்னர் அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காலியாக உள்ள மைன்புரி தொகுதிக்கு டிசம்பர் 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையம்

அதுமட்டுமல்லாமல் உ.பி.யின் ராம்பூர் சட்டமன்றத் தொகுதி, ஒடிசாவின் பதம்பூர், ராஜஸ்தானின் சர்தார்ஷஹர், பிஹாரின் குர்ஹானி, சத்தீஸ்கரின் பானுபிரதாப்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கும் டிச.5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்தத் தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் டிச.8ம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் வெளியாகும். இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.

டிம்பிள் யாதவ் போட்டி

டிம்பிள் யாதவ் போட்டி


இந்த உத்தரப் பிரதேச மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் மைன்புரி தொகுதி தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளராக சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

 சமாஜ்வாதி கோட்டை

சமாஜ்வாதி கோட்டை

உத்தரப் பிரதேசத்தின் மைன்புரி தொகுதி சமாஜ்வாதி கட்சியின் கோட்டையாக பார்க்கப்படுகிறது. தற்போது அகிலேஷ் யாதவ் மனைவியின் நேரடியாக போட்டியில் களமிறக்கப்பட்டுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இவருக்கு எதிராக பாஜக மற்றும் இதர கட்சிகளின் சார்பாக யார் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+