ராமர் கோயில் விழா! அணு குண்டு தாக்குதல் நடந்தால் கூட ஒன்னும் ஆகாது.. பாதுகாப்பு வளையத்தில் அயோத்தி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அயோத்தியில் ராமர் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில், அவருக்கான கோயிலை கட்ட கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். 360 அடி நீளம், 235 அடி அகலம், 161 அடி உயரத்தில், 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம், 360 தூண்கள் என பிரமாண்டமாக ரூ.1,100 கோடியில் பாரம்பரிய நாகரா பாணியில் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இந்த கோயிலில் இன்று குழந்தை ராமர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

Security arrangements have been intensified in Ayodhya on the occasion of the Ram Temple kumbhabhishekham

இன்று பிற்பகல் 12.29.08 மணிமுதல் 12.30.32 வரை (84 விநாடிகளில்) பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது. பதினாறு பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் சிறப்பாக அமைந்துள்ளதால் இக்குறுகிய காலத்தில் பிரதிஷ்டை நடைபெறவுள்ளது என ஸ்ரீ ராமஜென்மபூமி தீா்த்த க்ஷேத்ர அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய் கூறியுள்ளார். குழந்தை ராமரின் சிலையின் பீடம் 3 அடி உயரத்தைக் கொண்டது. இச்சிலை மக்ரானா மாா்பிள் கற்களால் செய்யப்பட்டு, அதன் மீது தங்கக் கவசம் பொருத்தப்பட்டுள்ளது.

கோயிலின் கும்பாபிஷேகம், பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத், உ.பி., கவர்னர் ஆனந்திபென் படேல், முதல்வர் யோகி ஆதித்யநாத், கோயில் அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் நாடு முழுவதும் இருந்து முக்கிய தலைவர்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்த கோயிலின் கும்பாபிஷேகம் முடிந்த பின்னர், தினந்தோறும் சுமார் 3 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வந்து செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கும்பாபிஷேகம் நடைபெறும் ஜனவரி 22ம் தேதி பல்வேறு மாநிலங்கள் பொது விடுமுறையை அறிவித்திருக்கின்றன. மட்டுமல்லாது கும்பாபிஷேக விழாவை நேரலையில் காண பாஜக ஆளும் மாநிலங்களில், பல்வேறு கோயில்களிலும் எல்இடி திரை வைக்கப்பட்டிருக்கிறது.

இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. 10,000 சிசிடிவி கேமராக்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட ஆளில்லா விமானங்கள் அயோத்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல சாதாரண உடையில் மக்கள் மத்தியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன.

இது தவிர இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி தாக்குதல்கள், மற்றும் பூகம்பம் போன்ற பேரழிவுகளை சமாளிக்கும் திறன் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினரும் அயோத்தியில் குவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும் ஸ்னைப்பர்கள் உயரமான இடங்களில் நிலைநிறுத்தப்பட்டிருக்கின்றனர். உளவுத்துறை அமைப்பான 'ரா' அயோத்தியின் அனைத்து செயல்பாட்டையும் உன்னிப்பாக கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+