அம்மாடி! "பாம்பை" சாக்லேட் போல மென்று கொன்ற 3 வயது குழந்தை! அதிர்ச்சியின் உச்சத்தில் தாய்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பாம்பை பார்த்தால் அச்சப்படாதவர்கள் யாருமே இல்லை. ஆனால், இங்கே சிறுவன் ஒருவன் பாம்பையே சாக்லேட் போல மென்று தின்றுள்ளார்.

"பாம்பு" என்றாலே படையே நடுங்கும் என்பார்கள். இங்கே நமக்கு எப்போதும் சில விலங்குகள் மீது பயம் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி எப்போதும் பார்த்து நடுங்கும் ஒரு ஊர்வன என்றால் அது பாம்பு தான்.

பாம்பு வந்தாலே அனைவரும் குறைந்தது 10 அடி தள்ளி ஓடிவிடுவார்கள். கண்ணை மூடி திறப்பதற்குள் பாம்பு நம்மை வந்து கடித்து விடும் என்பதே இதற்குக் காரணம். ஆனால், இங்கே நடந்த சம்பவத்தைப் படித்தீர்கள் என்றால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள்.

Shocking 3-year-old boy chews snake to death in front of his home

பாம்பு: 3 வயது சிறுவன் ஒருவன் பாம்பைக் கடித்துத் தின்று கொன்றுள்ளான். ஆம்.. நீங்கள் படிப்பது சரி தான். அந்த சிறுவன் தான் பாம்பைக் கடித்து மென்று தின்றுள்ளான். இது உத்தரப் பிரதேச மாநிலம் ஃபரூகாபாத் மாவட்டத்தில் மத்னாபூர் என்ற கிராமத்தில் நடந்துள்ளது. கடந்த சனிக்கிழமை இந்த ஷாக் சம்பவம் நடந்துள்ளது.

அப்பகுதியைச் சேர்ந்த தினேஷ் குமார் என்பவரின் மகன் அக்‌ஷய் தனது வீட்டின் வெளியே சனிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சிறுவன் திடீரென கத்த ஆரம்பித்துள்ளான். விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் திடீரென கத்தியதால் அவனது பாட்டி விரைந்து ஒடி சென்று அங்கே பார்த்துள்ளார். அப்போது அந்த சிறுவனின் வாயில் பாம்பு ஒன்று இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியின் உச்சத்திற்கே அவர் சென்றுவிட்டார்.

​​என்ன நடந்தது: இது குறித்து சிறுவனின் பாட்டி சுனிதா என்பவர் கூறுகையில், "பேரனின் வாயில் பாம்பு இருந்ததைப் பார்த்து அதிர்ந்து போனேன்.. நான் உடனடியாக அதை வாயில் இருந்து எடுத்துப் போட்டேன். சிறுவனின் பெற்றோருக்கு இது குறித்துச் சொன்னேன். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். உடன் அவரது பெற்றோரும் வந்தார்கள்" என்றார்.

மருத்துவரிடம் எளிதாக விளக்கி புரிய வைக்க சிறுவன் மென்று கொன்ற பாம்பையும் பாலிதீன் பேக்கில் வைத்து அவர்கள் மருத்துவமனைக்கு உடன் எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு டாக்டர்களாலேயே நம்ப முடியவில்லை. இருப்பினும், பாலிதீன் பேக்கில் இருந்தப் பாம்பைப் பார்த்த பிறகு தான் அவர்களுக்குப் புரிந்துள்ளது. இதையடுத்து அவர்கள் சிறுவனை 24 மணிநேரம் மருத்துவ கண்காணிப்பில் வைத்தனர்.

அதன் பின்னர் அவனைப் பரிசோதனை செய்து அவனுக்கு ஆபத்து இல்லை என்று கூறி டிஸ்சார்ஜ் செய்தனர். நல்வாய்ப்பாக அந்த பாம்புக்கு விஷமில்லை என்பதால் சிறுவனுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பாம்புகள்: உலகில் இருக்கும் அனைத்தும் நாடுகளிலும் கண்டறியப்படும் உயிரினமாகப் பாம்புகள் உள்ளன. தென் துருவ கண்டமான அண்டார்டிக்கா தவிர உலகின் அனைத்து கண்டங்களிலும் பாம்புகள் உள்ளன. வெறும் 10 செமி நீளமுடைய சிறிய பாம்பு தொடங்கி மிகவும் நீளமான மலைப்பாம்புகள், அதீத விஷம் கொண்ட நாகப்பாம்புகள் என உலகெங்கும் சுமார் 4000க்கும் மேற்பட்ட பாம்புகள் கண்டறியப்படுகிறது.

இதுபோன்ற பாம்புகள் இந்தோ-பசிபிக் நாடுகளில் தான் அதிகம் காணப்படும். அதிலும் இந்தியாவில் அதிக வகையிலான பாம்புகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+